Jump to content

Tamil Proverbs/ப

From Wikisource
3769910Tamil Proverbs — பPeter Percival

ப.

  1. பகலிற் பக்கம் பார்த்துப் பேசு, அர்த்தராத்திரியில் அதுதானும் பேசாதே.
    By day, look round and speak, at midnight do not utter a word.

  2. பகலிற் பசு தெரியவில்லை இரவில் எருமை தெரியுமா?
    Not being able to distinguish a cow by day, how can he distinguish a buffalo by night?

  3. பகிடிக்குப் பத்துக் காசு திருப்பாட்டுக்கு ஒரு காசு.
    Ten cash for a comedy, one cash for a sacred song.

  4. பகிடியைப் பாம்பு கடித்ததுபோல.
    As the snake bit the jester.

  5. பகுத்தல் இல்லாத துணிவு பாரம் இல்லாத கப்பல்.
    Daring without prudence, is as a ship without ballast.

  6. பகுத்து அறியாமல் துணியாதே படபடப்பாகச் செய்யாதே.
    Attempt nothing without consideration, and do nothing hastily.

  7. பகைக்கச் செய்யேல் மறு ஜெனனப்படு.
    Do not create enemies, act discreetly.

  8. பகையாளி குடியை உறவாடிக் கெடுக்க வேண்டும்.
    You must ruin the family of your enemy by feigned friendship.

  9. பகைவர் உறவு புகை எழு நெருப்பு.
    The friendship of foes is like fire concealed in smoke.

  10. பங்காளி குடி கெடுக்க வெங்காயம் குளிபோடச் சொன்னது போல.
    Like advising his partner to plant onions in order to effect his ruin.

  11. பங்காளி வீடு வேகிறது சுங்கான்கொண்டு தண்ணீர் விடு.
    The house of my partner is on fire, pour water with a pipe.

  12. பங்காளியும் பனங்காயும் பதம்பார்த்து வெட்டவேண்டும்.
    Observe the proper time for cutting a partner and palmyrah fruit.

  13. பங்குனி என்று பருப்பதும் இல்லை, சித்திரை என்று சிறுப்பதும் இல்லை.
    It wont grow larger because it is Panguni,-March-nor smaller because it is Chittarai-April.

  14. பங்குனிமாதம் பகல்வழி நடந்தவன் பெரும்பாவி.
    He that goes abroad in the day time in March, is a great sinner.

  15. பசி இல்லாதவனுக்குக் கரிப்பு மயிர் மாத்திரம்.
    He who is not hungry cares not a hair about famine.

  16. பசி ஏப்பக்காரனும் புளி ஏப்பக்காரனும் கூட்டுப்பயிர் இட்டதுபோல.
    As two men, one belching through hunger, and the other by indigestion, were associated in joint tillage.

  17. பசு ஏறுவாலும் எருது கூழைவாலும்.
    A cow with a long tail, an ox with a short one.

  18. பசிக்குக் கறி வேண்டாம், தூக்கத்துக்குப் பாய் வேண்டாம்.
    When hungry curry is not needed, nor a mat when sleepy.

  19. பசிக்குப் பனம் பழம் தின்றால் பித்தம் பட்ட பாடு படட்டும்.
    Eat palmyrah fruit to satisfy hunger, no matter about the bile.
    Palmyrah fruit is believed to be very bilious.

  20. பசி தீர்ந்ததானால் பாட்டு இன்பமாம்.
    Songs are pleasant after refection.

  21. பசித்த பறையனும் குளித்த சைவனும் சாப்பிடாது இரார்.
    A hungry pariah and a saiva that has bathed, must have eaten first.

  22. பசித்தவன் தின்னாததும் இல்லை. பகைத்தவன் சொல்லாததும் இல்லை.
    There is nothing edible which the hungry will not eat, there is no reproach which the malevolent has not uttered.

  23. பசித்தவன் மேல் நம்பிக்கை வைக்கலாமா?
    Can confidence be placed in a hungry person?

  24. பசித்த செட்டி பாக்குத் தின்றானாம்.
    It is said that a hungry merchant chewed betel and arica-nut.

  25. பசித்தவன் பயற்றை விதைக்கட்டும்.
    Let the hungry sow peas.

  26. பசித்தவன் பழம் கணக்கைப் பார்ப்பதுபோல்.
    As a hungry man looks at his old accounts.

  27. பசித்தார் பொழுதும் போம் பாலுடன் அன்னம் புசித்தார் பொழுதும் போம்.
    The sun goes down on the hungry, and also on those who eat their rice and milk.

  28. பசியாமல் மருந்து கொடுக்கிறேன் பழையது இருந்தால் போடு என்பதுபோல.
    Like saying, put before me some old rice if there be any, and I will give you medicine that will prevent your hungering again.

  29. பசி ருசி அறியுமா நித்திரை சுகம் அறியுமா?
    Does hunger appreciate flavours, or sleep enjoyment?

  30. பசி ருசி அறியாது, நித்திரை சுகம் அறியாது.
    Hunger is ignorant of flavours, sleep is ignorant of enjoyment.

  31. பசி வந்திடில் பத்தும் பறந்துபோம்.
    Hunger dissipates the ten.
    The ten are the five senses and their organs.

  32. பசுகறுப்பென்று பாலும் கறுப்பா?
    Because the cow is black, is her milk also black?

  33. பசுச் சாதும் பார்ப்பான் ஏழையும் உண்டா?
    Are there any gentle cows, or poor brahmans?

  34. பசுத் தோல் போர்த்துப் புலிப் பாய்ச்சல் பாய்கிறது.
    To wear a cow skin, and spring like a tiger.

  35. பசுப்போலே இருந்து புலிப்போலே பாய்கிறாய்.
    Gentle as a cow, you spring as a tiger.

  36. பசு மரத்தில் தைத்த ஆணிபோல.
    Like a nail driven into a green tree.

  37. பசு விழுந்தது புலிக்குத் தாயம்.
    The falling of the cow, is a gain to the tiger.

  38. பசுவுக்கு இரை கொடுத்தால் மதுரமான பால் கொடுக்கும். அதுபோல, நல்லவர்களுக்குச் செய்கிற உபகாரம் பலன் அளிக்கும்.
    When a cow is fed she yields sweet milk, so the favours shewn to the good will bring a reward.

  39. பசுவைக் கொன்றால் கன்று பிழைக்குமா?
    If you slaughter a cow, will its calf live?

  40. பசுவைக் கொன்று செருப்புத் தானம் செய்தது போல.
    Like killing the cow and giving shoes made of its hide.

  41. பசுவை அடித்துப் புலிக்குத் தானம் கொடுக்கிறதா?
    Do you kill a cow, and make an offering of it to a tiger?

  42. பசுவை விற்றாற் கன்றுக்கு வழக்கா?
    Having sold the cow, is there a dispute about the calf?

  43. பச்சடி கண்டால் ஒட்டடிமகளே.
    Daughter, if you find him rich, cling to him.

  44. பச்சிலையும் கிள்ளப்படுமோ பராபரமே?
    O God, is a tender plant also to be cut off!

  45. பச்சை கொடுத்தால் பாவம் தீரும் வெள்ளை கொடுத்தால் வினை தீரும்.
    If raw provisions are given, the sins of the present birth will be removed, if white cloths are given, the sins of former births will be cancelled.

  46. பச்சைச் சிரிப்புப் பல்லுக்குக் கேடு தூவு பருக்கை லயிற்றுக்குக் கேடு.
    Feigned laughter is bad for the teeth, and scattered grains of boiled rice are bad for the stomach.

  47. பச்சை செல்லுக்குப் பறையனிடத்திற் சேவிக்கலாம்.
    You may serve a pariah for paddy.

  48. பச்சை மண்ணும் சுட்ட மண்ணும் ஒட்டுமா?
    Will moist and burnt clay unite?

  49. பச்சை மரம் படப் பார்ப்பான்.
    He can stare so as to make a green tree decay.

  50. பச்சை மரத்திற்கு இத்தனை என்றாற் பட்டமரத்திற்கு எத்தனை?
    If so much to the green tree, how much to the dry?

  51. பஞ்சம் இல்லாக் காலத்தில் பசி பறக்கும்.
    In the absence of famine hunger flies away.

  52. பஞ்சம் போம் பஞ்சத்திற் பட்ட வசை போகாது.
    The famine will end, but a scar then made will not pass away.

  53. பஞ்சானும் குஞ்சும் பறக்கத் தவிக்கிறது.
    The little ones starve excessively.

  54. பஞ்சாங்கம் போனாலும் நட்சத்திரம் போகாது.
    Though astrological calculations prove false, the stars will not.

  55. பஞ்சு படிந்த பழம் சித்திரம்.
    An old picture covered with dust.

  56. பஞ்சுப் பொதியில் நெருப்புப் பட்டதுபோல.
    Like fire touching a bale of cotton.

  57. பஞ்சுப்பொதியிற் பட்ட அம்புபோல.
    Like an arrow striking a bale of cotton.

  58. பஞ்சும் நெருப்பும் ஒன்றாய்க் கிடக்குமோ?
    Can cotton and fire be placed together?

  59. பஞ்சும் நெருப்பும்போலே.
    Like cotton and fire.

  60. பஞ்சை பணிகாரம் சுட்டதும், வீங்கல் விசாரப்பட்டதும்.
    The poor baked the cakes, the greedy longed for them.

  61. படி ஆள்வார் நீதி தப்பிற் குடி ஆர் இருப்பவர் குவலயத்தில் ஆர்?
    If rulers err, who can abide on the earth?

  62. படிக்கு ஆசான் இருந்தால் குடிக்குச் சேதம் இல்லை.
    If the giver of the daily allowance be alive, no loss to the family.

  63. படிக்கிறது திருவாய்மொழி, இடிக்கிறது பெருமாள் கோவில்.
    To read Tiruváymoli, and to break down the temple of Vishnu.

  64. படிக்கிற பிள்ளை பாக்குப் போட்டால் நாக்கு தடிப்பாய் போம்.
    If a school boy chew betel, his pronunciation will be spoilt.

  65. படித்து முட்டாளாய் இருக்கிறான்.
    He is a learned fool.

  66. படித்தவனுக்கும் படியாதவனுக்கும், கொக்குக்கும் அன்னத்துக்கும் வித்தியாசம்போல.
    The difference between the learned and the unlearned, is as great as that of a crane and a swan.

  67. படுகளப்பட்ட பன்னாடை.
    A palm network driven in a battle-field.

  68. படுகளத்தில் ஒப்பாரியா?
    Do they sing elegies in a battle-field?

  69. படுக்கைச் சுகம் மெத்தை அறியாது.
    The comfort of the bed is not experienced by the mattress.

  70. படுவது பட்டும் பட்டத்துக்கு இருக்கவேண்டும்.
    Whatever hardships he may have to endure, he must have the rank to which he is entitled.

  71. படை கெட்டு ஓடுகையில் நரை மயிர் பிடுங்குகிறதா? .
    When an army is routed, are grey hairs pulled out?

  72. படைக்கு ஒருவன் கொடைக்கு ஒருவன்.
    One to fight, and one to give.

  73. படை மிகுந்தால் அரண் இல்லை.
    If an army be large, a fortress is not required.

  74. படை முகத்திலும் அறிமுகம் வேண்டும்.
    An acquaintance is necessary even in a battle-field.

  75. படையாது படைத்த மருமகளே உன்னைப் பறையன் அறுக்கக் கனாக் கண்டேன்.
    O, my daughter-in-law, who art entertaining me sumptuously, I dreamt that thou wast being dissected by a pariah.

  76. பட்சி பசித்தாலும் எட்டிக்கனியைத் தின்னாது.
    Though a bird is hungry, it will not eat poisonous berries.

  77. பட்ட காலிலே படும், கெட்ட குடியேக் கெடும்.
    It will hit the foot already injured, the decayed family will be ruined.

  78. பட்டணத்தாள் பெற்ற குட்டி பணம் பறிக்க வல்ல குட்டி.
    A young one born of a city mother is clever at thieving.

  79. பட்டணத்து வாசலைப் படலாலே மூடுகிறதோ?
    Can you cover up a city gate with a hurdle?

  80. பட்டணத்து வாசலைப் பட்டாலே மூடி இருக்கிறதா?
    Is the gate of the city veiled with silk?

  81. பட்டடை வாய்த்தால் பணி வாய்க்கும்.
    If the anvil is good, the work will be good.

  82. பட்டவர்க்கு உண்டு பலன்.
    Those who have taken pains will enjoy the gains.

  83. பட்டவளுக்கு பதவி உண்டு.
    She who suffered will attain advantage.

  84. பட்டால் அறிவான் சண்டாளன், மழை பெய்தால் அறிவான் வெள்ளாளன்.
    A rogue is wise when punished, the farmer when it rains.

  85. பட்டினத்து நரியைப் பனங்காட்டு் நரி ஏய்த்ததாம்.
    It is said that the jackal of the palmyrah grove cheated the city fox.

  86. பட்டிக் காட்டுக்குச் சிவப்புத் துப்பட்டிப் பீதாம்பரம்.
    In a common village, a red garment is regarded as a sumptuous garment.

  87. பட்டு அறி கெட்டு அறி பத்து எட்டு இறுத்து அறி.
    Be wise by suffering, by poverty, and by paying ten and eight fines.

  88. பட்டு குலைந்தால் பொட்டு.
    When silk thread is untwisted, it becomes useless.

  89. பட்டு்க் கத்தரித்ததுக்போலப் பேசவேண்டும்.
    You must speak carefully as silk is cut by the scissors.

  90. பட்டுக் கோட்டைக்கு வழி எங்கே என்றால் கொட்டைப்பாக்கு விலை நூற்றைம்பது என்கிறான்.
    When he was asked which was the way to Pattucotta, he said the price of arica-nuts is a hundred and fifty fanams.

  91. பட்டுக்கு அழுவார் பணிக்கு அழுவார் வையகத்தில் பாக்குக்கு அழுத பாரதத்தைக் கண்டது இல்லை.
    There are who cry for a silk cloth, and there are who cry for ornaments; I never saw any one in the world cry for betel nut.

  92. பட்டுப் புடைவை இரவல் கொடுத்து மணை எடுத்துக்கொண்டு திரிவதுபோல.
    Like lending a silk cloth to another, and wandering about carrying a seat with her.

  93. பட்டும் பட்டாவளியும் பெட்டியில் இருக்கும் காற் காசுக் கந்தை ஓடி உலாவும்.
    The silk and the velvet are kept in a box, while a rag not worth a cash walks about the street.

  94. பட்டைக்குத் தக்க பழம் கயிறு.
    An old rope suited to the well-bucket.

  95. பணக்கள்ளி பாயில் படாள்.
    A niggardly woman will not lie on a mat.

  96. பணக்காரன் பின்னும் பத்துப் பேர், பயித்தியக்காரன் பின்னும் பத்துப் பேர்.
    Ten follow after a moneyed man, and ten after a fool.

  97. பணத்துக்குப் பெயர் ஆட்கொல்லி.
    Money is called a man-slayer.

  98. பணத்துக்கு ஒரு அம்பு கொண்டு பாழில் எய்கிறதுபோல.
    Like buying arrows at a fanam each, and wasting them.

  99. பணத்தைக் கொடுத்துப் பணிகாரத்தை வாங்கிப் பற்றைக்குள்ளே இருந்து தின்கவேண்டுமோ?
    Is it necessary for you to hide yourself in a bush, and eat the cakes for which you have paid?

  100. பணம் இருந்தால் பாக்ஷா, பணம் இல்லாவிட்டால் பக்கிரி.
    If I have money, Páchcha; if not money, Pakkiri.

  101. பணம் இல்லாதவன் பிணம்.
    He who has no money is a corpse.

  102. பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும்.
    If the word money be uttered, even a corpse will open its mouth.

  103. பணம் என்ன செய்யும் பத்து விதம் செய்யும்.
    What can money effect? it can do ten kinds of things.

  104. பணம் என்ன பாஷாணம், குணம் ஒன்றே போதும்.
    Why money? it is poison; a good disposition is enough.

  105. பணம் குலம் ஆகும், பசி கறி ஆகும்.
    Money, is rank; hunger, is curry.

  106. பணம் பந்தியிலே குலம் குப்பையிலே.
    Money at the festive board, and rank on the dunghill.

  107. பணிகாரமோ சிலுசிலுப்போ?
    Is the sound that of baking cakes, or is it mere frizzle?

  108. பண்டாரம் பிண்டத்துக்கு அழுகிறான், லிங்கம் பால் சோத்துக்கு அழுகிறது.
    The religious mendicant is crying for a mouthfull of food, the linga, he worships, for rice and milk.

  109. பண்டை பட்ட பாட்டைப் பழங்கிடுகில் போட்டுவிட்டுச் சம்பா நெல்குத்திப் பொங்கல் இடுகிறாள்.
    Having put aside her former troubles on an old cadjan, she husked chamba rice and boiled it.

  110. பண்ணப் பண்ணப் பல விதம் ஆகும்.
    The more he makes, the more varied the forms.

  111. பண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும்.
    A man’s merit may be seen in the grain he grows.

  112. பதறாத காரியம் சிதறாது.
    A thing done without haste never fails.

  113. பதறிச் செய்கிற காரியம் சிதறிக் கெட்டுப்போகும்.
    A hasty proceeding will go to ruin.

  114. பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழவேண்டும்.
    May you bear sixteen children, and live very prosperously.

  115. பத்தி கொள்பவன் முத்தி உள்ளவன்.
    The devout attain heaven.

  116. பத்தியத்துக்கு முருங்கைக்காய் கொண்டுவரச் சொன்னால், பால் தெளிக்க அகத்திக்கீரை கொண்டுவருவான்.
    When requested to bring murunga fruit for diet, he brings coronilla grandiflora leaves for the milk-sprinkling ceremony.
    See note under proverb 4684.

  117. பத்தி இல்லாப் பூனை பரமண்டலத்துக்கு ஏறுமா?
    Will an ungodly cat ascend to heaven?

  118. பத்தி இல்லாத புத்தி அசேதனம்.
    Reason without devotion is folly.

  119. பத்தி உண்டானால் முத்தி உண்டாம்.
    If there be piety, there will be final happiness.

  120. பத்தியோடே பாகற்காய் சட்டியோடே தீயுது.
    Pagal fruits in clusters are being charred in the chatty.

  121. பத்திலே விழுந்த பாம்பும் சாவாது.
    Even a snake that has fallen among ten, will not die.

  122. பத்திலே பசலை இருபதிலே இடும்பு.
    At ten childishness, at twenty arrogance.

  123. பத்தினியைத் தொட்டதும் துரியோதனன் பட்டதும்.
    By touching the virtuous woman, Dropati, Duriyodhana was ruined.

  124. பத்து இறுத்தபின் பாரச் சந்தேகம் தீர்ந்தது.
    After I paid a fine of ten, doubt was removed.

  125. பத்து அரிசியும் வேகவில்லை, பாவி பிராணணும் போகவில்லை.
    Ten grains of rice wont boil, the life of the wretch wont go.

  126. பத்துக்கு மேலே ஒரு பறையனுக்கும் தள்ளவேண்டும்.
    After ten years of age, a girl should be affianced if even to a pariah.

  127. பத்துப் பணம் கொடுத்தாலும் இத்தனை பதைப்பு ஆகாது.
    Though you give ten fanams, such haste is bad.

  128. பத்துப் பேரிலே பதினொராம் பேராய் இருக்கவேண்டும்.
    Of the ten, you must pass as the eleventh.

  129. பத்து வராகன் இறுத்தோம், என்றாலும் சந்தேகம் நிவர்த்தி ஆயிற்றே.
    We were fined ten pagodas, however our doubts were removed.

  130. பத்து விதத்திலும் பறையனை நம்பலாம் பார்ப்பானை நம்பக்கூடாது.
    In ten ways a Pariah is trustworthy, but a brahman is not.

  131. பத்து ஏர் வைத்துப் படைமரமும் தோற்றேன் எத்தனை ஏர் வைத்துக் கோவணமும் தோற்றாய்?
    Possessed of ten yoke of oxen I lost the plough share; how many yoke did you possess before you lost your waist cloth?

  132. பந்தம் சொன்னார் படைக்காகார்.
    Those who regard relationships are unfit for military service.

  133. பந்திக்கு முந்தவேண்டும் படைக்குப் பிந்தவேண்டும்.
    Be first at a feast, and last at the fight.

  134. பந்தியிலே வேண்டாம் என்றால் இலை பொத்தல் என்கிறாய்.
    When rejected at the feast, thou sayest that the leaf is torn.

  135. பயணக்காரன் பயித்தியக்காரன்.
    A man about to set out on a journey, is a fool.

  136. பயித்தியமோ பண்டாரமோ வென்றால் இப்போதுதான் தொடருகிறது என்றான்.
    When I ask him whether he is mad or a mendicant, he says, it is just following.

  137. பயித்தியம் மாறிப்போச்சு உலக்கைத்தடி கொண்டுவா கோவணம் கட்ட.
    My madness is gone, bring me a pestle to tie round my waist.

  138. பரணி அடுப்புப் பாழ்போகாது.
    A fireplace made on the second lunar day will not be deserted.

  139. பரம்பரை ஆண்டியோ பஞ்சத்துக்கு ஆண்டியோ?
    Is he a hereditary mendicant, or a mendicant, because of the famine?

  140. பரிகாரி உறவு தெருவாசல் மட்டும்.
    The friendship of the doctor ends at the threshold.

  141. பரியத்துக்கு அஞ்சிக் குருட்டுக் கண்ணியை கொண்டது போல.
    Like marrying a blind woman to avoid paying the nuptial present.

  142. பரிவு இல்லாப் போசனத்திற் பட்டினி நன்று, பிரியம் இல்லாப் பெண்டிற் பேய் நன்றி.
    Hunger is preferrable to eating food given without good feeling, a demoness is better than an unkind wife.

  143. பருத்திக் கடையிலே நாய்க்கு அலுவல் என்ன?
    What can a dog have to do in a cotton bazaar?

  144. பருத்திக்காடு உழுகிறதற்கு முன்னே பொம்மனுக்கு ஏழு முழம் திம்மனுக்கு ஏழு முழம்.
    Ere the cotton fields are ploughed, Pomman asks for a cloth of seven cubits, and Timman wants one of the same length.

  145. பருத்தி புடைவையாய்க் காய்த்ததுக்.
    The cotton tree produced cloth.

  146. பருத்திப் பொதிக்கு ஒரு நெருப்புப் பொறிபோல.
    As a single spark to a bale of cotton.

  147. பருப்பிலே நெய் விட்டதுபோல.
    As ghee was poured on beans.

  148. பருமரத்தை அண்டிய பல்லியும் சாகாது.
    If sheltered near a large tree even a lizard will not die.

  149. பல உமி தின்றால் ஒரு அவிழ் தட்டும்.
    If one consume plenty of husks, a grain may turn up.

  150. பல சரக்குகாரனைப் பயித்தியம் பிடித்ததுபோல.
    As the vendor of curry stuff was seized with madness.

  151. பல தீட்டுக்கு ஒரு முழுக்கு.
    One ablution for many defilements.

  152. பல துளி பெரு வெள்ளம்.
    Many drops make great flood.

  153. பருவத்தே பயிர் செய்.
    Cultivate in due time.

  154. பரோபகாரமே பெரிது.
    Benevolence is indeed great.

  155. பலத்தவனுக்கு மருந்து சொன்னாற் பிடுங்கிக் கொடுத்துத் தீர வேண்டும்.
    If you prescribe medicine for the strong, you must procure the medicinal plants yourself.

  156. பலத்தவன் கைக்கு இளைத்தவன் துரும்பு.
    The feeble is a straw in the hands of the powerful.

  157. பலநாளைத் திருடன் ஒரு நாளைக்கு அகப்படுவான்.
    An old thief will one day be caught.

  158. பல பாவம் தீர ஒரு புண்ணியம் ஆகிலும் பண்ண வேண்டும்.
    One virtuous deed at least, is required to expiate numerous sins.

  159. பல மரம் கண்ட தச்சன் ஒருமரம் வெட்ட மாட்டான்.
    The carpenter who is acquainted with various sorts of wood, is not able to fell a tree.

  160. பல முயற்சி செய்யினும் பகவன் மேல் சிந்தை வை.
    After making every effort, fix your mind on God.

  161. பல வீட்டுப் பிச்சை ஆறாய்ப் பெருகும்.
    The alms of many houses may flow as a river.

  162. பலன் இல்லாப் பல நாளிலும், அறம் செய் ஒரு நாள் பெரிது.
    One day spent in alms giving is greater than many spent in doing nothing.

  163. பலா உத்தமம், மா மத்திபம், பாதிரி அதமம்.
    The jack tree is the best, the mango is good, the pathri tree is indifferent.

  164. பல் ஆடப் பசி ஆறும்.
    As the teeth move hunger is appeased.

  165. பல்லக்கு ஏற யோகம் உண்டு உன்னி ஏறச் சீவன் இல்லை.
    He has a palanquin, but is not able to mount it.

  166. பல்லக்குக்கு மேல்மூடி இல்லாதவனுக்கும், காலுக்குச் செருப்பு இல்லாதவனுக்கும் விசாரம் ஒன்றே.
    He whose palanquin has no top, and he who has no shoes for his feet are equal.

  167. பல்லு விழுந்த புடையன்.
    A snake without fangs.

  168. பல்லு விழுந்த புடையனுக்கு கிருதா?
    Is the rage of a fangless snake dangerous?

  169. பவுசு கெட்ட பாக்கட்டிக்கு இரண்டு பக்கமும் தீவட்டியாம்.
    A torch on either side of a lump of worthless sugar.

  170. பழக பழகப் பாலும் புளிக்கும்.
    By constant use even milk will taste sour.

  171. பழங்கால் தூர்க்கவேண்டாம் புதுக்கால் வெட்ட வேண்டாம்.
    Do not fill up an old channel; do not cut a new one.

  172. பழத்திலே பழம் மிளகாய்ப்பழம்.
    The chief of berries is the chilli.

  173. பழத்தேங்காயிலே தான் எண்ணெய்.
    Old cocoanuts yield oil.

  174. பழம் நழுவிப் பாலில் விழுந்ததுபோல.
    Like fruit slipping and falling into milk.

  175. பழம் புண்ணாளி பாதிவைத்தியன்.
    He who has an old sore is half a doctor.

  176. பழிக்கு ஆனோர் சிலர் பழி படுவோர் சிலர்.
    One hasty commits the crime, and another suffers the penalty.

  177. பழிப்பான கல்வி பாவத்தின் ஊற்று.
    Despicable learning is a fountain of sin.

  178. பழிப்பன பகரேல்
    Utter no reproach.

  179. பழுது செய்ததை அறிக்கை இடல் பாதி நிவிர்த்தி.
    The confession of a fault removes half its guilt.

  180. பழுத்த ஓலையைப் பார்த்துக் குருத்து ஓலை சிரிக்கிறதாம்.
    It is said that the young palm leaf is laughing at the dry leaf because it is falling off.

  181. பழுத்த பழம் கொம்பில் இராது.
    Ripe fruit does not remain on the branch.

  182. பழைய கறுப்பன் கறுப்பனே பழைய மண்கிண்ணி மண்கிண்ணியே.
    My name old Karuppan is still my name, and my earthen basin is still my eating dish.

  183. பழைய குருடி கதவை திறவடி.
    O thou blind old woman, open the door.

  184. பழையது மீந்த இடம் காணியாட்சி.
    The place where one gets plenty of cold rice is the right one.

  185. பள்ளம் இறைத்தவன் பங்கு கொண்டுபோகிறான்.
    He who irrigated the low ground takes his share of the produce.

  186. பள்ளம் உள்ள இடத்திலே தண்ணீர் நிற்கும்.
    Water will stand in a hollow.

  187. பள்ளிக் கணக்குப் புள்ளிக்கு உதவாது.
    Accounts learnt at school will not be practically useful.

  188. பள்ளிக் குப்பத்துக்கு அம்பட்ட வாத்தியார்.
    A barber school master for a village inhabited by Pallis.

  189. பள்ளி பாக்குத் தின்றால் பத்து விரலும் சுண்ணாம்பு.
    If a Palli chews betel, his ten fingers will be smeared with chunam.

  190. பள்ளிப் பிள்ளை என்றால் செல்வம் குறையுமா ?
    If you admit that you are a school boy, will your wealth decrease?

  191. பள்ளிக்கு வைக்காமற் கொள்ளிக்குக் குறைத்து வைத்தார்.
    My father not only neglected to put me to school, but left me to bear the expenses of the fire brand.
    Under this proverb a general note on funeral rites may not be out of place. The particulars given relate to Hindu families generally, not to brahmans.
    When a person dies, the grief of the females in the family bursts out into loud lamentations. On its being made known by a conch-blower that a death has occurred, the neighbouring females go to the house, add the expression of their sympathy, and all unite in one general wail. Frequently one of the company, the mother, or it may be a professional person, breaks out into an ascription of praise regarding the deceased uttering a sort of elegy in measured cadence. In this case when a climax is reached, all join in a chorus of grief, and some may smite their breasts and tear their hair. In such elegies, which are often of a touching kind, the personal beauty, the talents, the learning and the prowess of the deceased are dwelt on.
    The body being taken out is bathed and dressed as in life. In the case of females the gold and pearls and precious stones, if she possessed them, will be put on. The sectarial marks will be added. The chárpoy on which the corpse has been laid out is then carried into the house. Again the females seat themselves around it and pour forth a torrent of grief, or at any rate make a loud noise. A kinsman whose business it is to attend to the customary observances spreads a cloth on the chárpoy to hold rice, called,—rice for the mouth. The females of the family take a little of the grain and put it on the corpse near the mouth. The same ceremony is performed by the male members of the family at the place of cremation. The family barber appropriates the remaining rice. At the burning ground the kinsman who conducts the ceremonies carries a pot of water round the pyre and the conch-blower follows him and makes an incision in the pot with his conch, when the barber puts four bits of sandal or other wood into the hands of the kinsman and points out the places in the pyre where they are to be inserted. The leaking pot is then taken by the barber to be broken near the head of the corpse. The kinsman hastens away that he may not hear the noise of the pot when broken, nor see the burning pyre. Then the barber receives permission to break the pot and to ignite the pyre.
    On the next or on an early day the male friends of the deceased assemble at the place of cremation. The skull, the breast-bone and the bones of the hands having been abstracted from the ashes and deposited in a convenient place covered with a plantain leaf, are by the nearest of kin smeared with oil, ghee and honey and covered with flowers, whilst a priest recites appropriate incantations in the presence of the relatives. A pot of milk having been provided for this ceremony, the relatives take a sprig of coronilla grandiflora and having dipped it in the milk, sprinkle the relics, which are then put into an unburnt earthen vessel, covered with cloth to be cast into a sacred stream or bestowed on the ocean wave. Of course these elaborate rites are dispensed with by the poor.
    I have seen Hindus, not by any means in abject circumstances, convey a corpse to the seaside, where a grave had been hastily dug, take off the cloth and ornaments, wrap the body in a common mat, and bury it with the burial of a dog.
    In the year 1830 when travelling in Bengal I saw, on the bank of the Damooda, a sorrowing brahmanical father with two or three attendants dispose of a corpse with but little ceremony. The father himself who was much affected ignited the pyre.

  192. பள்ளி ஒளித்திரான் பார்ப்பான் குளித்திரான்.
    A palli does not like to be secluded, nor does a brahman fast after bathing.

  193. பறக்கிற பறவைக்கு எது தூரம்?
    What is distance to a bird on the wing?

  194. பறக்கும் காகம் இருக்கும் கொம்பு அறியாததுபோல.
    As a crow on the wing knows not on what branch it will alight.

  195. பறக்கும் குருவிக்கும் இருக்கும் கொம்பு தெரியாது, பரதேசிக்குத் தங்கும் இடம் தெரியாது.
    A bird on the wing knows not the branch on which it may alight, a stranger knows not his halting place.

  196. பறந்துபோகிற எச்சிற் கல்லைமேல் கல்லைத் தூக்கி வைத்தாற்போல.
    Like one placing a stone on a flying leaf that has been used for a rice-plate.

  197. பறப்பான் பயிர் இழந்தான் அறக்காஞ்சி பெண்டு இழந்தான்.
    A hasty man loses the produce of his field, and the jealous man his wife.

  198. பறித்த காட்டுக்குப் பயம் இல்லை.
    No further fear in a jungle, where one has been already robbed.

  199. பறைச்சி பிள்ளையைப் பள்ளிக்கு வைத்தலும் பேச்சிலே அய்யே என்னுமாம்.
    Though a pariah child be sent to school, he will still call his father ayyè.

  200. பறை தட்டினாற்போல.
    Like striking grain to the level of the measure.

  201. பறைத் தெருவிலே வில்வம் முலைத்ததுபோல
    As a vilva tree sprang up in a pariah street.

  202. பறைப்பாட்டுக்கும் பறைப்பேச்சுக்கும் சுரைப்பூவிற்கும் மணம் இல்லை.
    A pariah’s song, his dialect, and a surai flower, have no fragrance in them.

  203. பறையனும் பார்ப்பானும் போல.
    Like a pariah and a brahman.

  204. பறையன் பொங்கல் இட்டால் பகவானுக்கு ஏறாதோ?
    If a pariah boil rice as an offering to God, will it not be accepted?

  205. பறையை பள்ளிக்கு வைத்தாலும் துறைப்பேச்சுப் போமா?
    Though a pariah is schooled, will his vulgar brogue be altered?

  206. பறைவேலை அரைவேலை.
    The work of a pariah is only half done.

  207. பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சுமா?
    Will the jackal of the palmyrah grove tremble at the rustling leaves?

  208. பனிக்கண் திறந்தால் மழைக்கண் திறக்கும்.
    If there be dew, there will be no rain.

  209. பனி பெய்து கடல் நிறையுமா?
    Will the sea be filled by the falling dew?

  210. பனி பெய்து குளம் நிரம்புமா?
    Will the falling dew fill the tank?

  211. பனி பெய்தால் மழை இல்லை, பழம் இருந்தால் பூ இல்லை.
    When there is dew there is no rain, when fruit is ripe there is no blossom.

  212. பனிப் பெருக்கிலே கப்பல் ஓட்டலாமா?
    Can you sail a ship in heavy dew?

  213. பனியை நம்பி ஏர் பூட்டினதுபோல.
    Like beginning to plough depending on the dew.

  214. பனை ஏறியும் பாளைதொடாது இறங்கினாற்போல.
    Like descending from a palmyrah tree without touching the flower-spathe.

  215. பனை ஏறி விழுந்தவனைக் கடா ஏறி மிதித்ததுபோல.
    Like a buffalo trampling on a person who has fallen from a palmyrah tree.

  216. பனை மரத்தின் கீழே பாலைக் குடித்தாலும் கள் என்று நினைப்பார்.
    Though what you drink in a palmyrah grove be milk, every one will believe it to be toddy.

  217. பனைமரத்திற்கு நிழல் இல்லை பறையனுக்கு முறை இல்லை
    A palmyrah tree casts no shade, a pariah has no rules.

  218. பனைமரம் ஏறுகிறவனை எதுவரைக்கும் தாங்கலாம்?
    How far can you support a man who is climbing a palmyrah tree?

  219. பனையின் நிழலும் நிழலோ பகைவர் உறவும் உறவோ?
    Is the shadow of a palmyrah tree a shade, is the acquaintance of an enemy friendship?

  220. பனியில் இருந்து விழுந்தவனைப் பாம்பு கடித்ததுபோல
    Like a snake biting one who has fallen from a palmyrah tree.

  221. பனை வெட்டின இடத்திலே கழுதை வட்டம் போட்டதுபோல.
    Like an ass going round a place where a palmyrah tree had been felled.

  222. பன்றிக்குட்டிக்கு ஒருசந்தி ஏது?
    Does a young pig observe fasts?

  223. பன்றிக்குட்டி ஆனை ஆமா?
    Will the young pig become an elephant?

  224. பன்றிபட்டால் அவனோடே, காட்டானை பட்டால் பங்கு.
    If a hog be shot he takes the whole, if an elephant be shot I shall have a share.

  225. பன்றி பல குட்டி, சிங்கம் ஒரு குட்டி.
    The sow has many young ones at a time, the lioness only one.

  226. பன்றி பல குட்டி போட்டு என்ன?
    What, if a sow has a numerous litter?

  227. பன்றியோடு கூடிய கன்றும் மலம் தின்னும்.
    A calf that goes with a pig will eat excrement.

  228. பன்னக்காரன் பெண்டில் பணியக் கிடந்து செத்தாளாம்.
    It is said that the wife of a mat-maker died on the bare ground.

  229. பன்னிப் பன்னிப் பழங்கதை படியாதே.
    Do not tell old stories with affectation.