Tamil Proverbs/பா
Appearance
பா.
-
- பாகற் கொட்டை புதைக்கச் சுரைக்கொட்டை முளைக்குமா?
- Will a bottle gourd spring from a págal seed?
-
- பாசம் அற்றவன் பரதேசி.
- He who has no ties is like a foreigner.
-
- பாடகக்காலி வாழ்ந்தால் பத்து எட்டுச் சனம் பிழைக்கும்.
- If the foot-ringed lady prosper, eight or ten people may be supported thereby.
-
- பாடம் ஏறினும் ஏடு கைவிடேல்.
- Though you have learnt your lesson, do not throw away your book.
-
- பாடிப் பாடிக் குத்தினாலும் பதரில் அரிசி இல்லை.
- Though pounded with a song, chaff will not yield rice.
-
- பாடு என்றால் பாணனும் பாடான்.
- When pressed to sing, even the professional singer refuses.
-
- பாடு படாமற் போனால் பலன் இல்லாமற் போகும்.
- Where there is no labour, there is no profit.
-
- பாடும் புலவர் கையிற் பட்டோலை ஆனேனே .
- I am become an ola in the band of a poet.
-
- பாடை ஏறினும் ஓடு கைவிடேல்.
- Though you may ascend the bier, forsake not your alms-dish.
-
- பாணம் தொடுத்தாற் போலப் பேசுகிறான்.
- He speaks as if arrows were darting forth.
-
- பாதகர் பழக்கம் பாம்பொடு பழகல் போல.
- Friendship with the wicked, is like playing with snakes.
-
- பாதிச் சுரைக்காய் கறிக்கும் பாதிச் சுரைக்காய் விதைக்குமா?
- Can you take half a churaikáy for curry, and use the other half as seed?
-
- பாத்திரம் அறிந்து பிச்சை இடு, கோத்திரம் அறிந்து பெண் கொடு.
- Give alms to the worthy, and your daughter to one of a good family.
-
- பாப்புக்கு மூப்பு இல்லை.
- Brahmans have no chiefs.
-
- பாமணி ஆற்றிலே பல்லை விளக்கு, முல்லை ஆற்றிலே முகம் கழுவு.
- Begin to clean your teeth at Pámani river, wash your face in Mullai river.
-
- பாம்பாட்டி பாம்பிலே, கள்ளன் களவிலே
- A snake charmer understands snakes, a thief understands thieving.
-
- பாம்பிலும் பாம்புக்குட்டி விஷம் அதிகம் வீரியமும் அதிகம்.
- A young snake is more poisonous and vigorous than an old one.
-
- பாம்பின் குட்டி பாம்பு அதன் குட்டி நட்டுவாக்காலி.
- The young one of a snake is a snake, and its young one is a scorpion.
-
- பாம்பின் வாய்த் தேரைபோல.
- Like a toad in the jaws of a snake.
-
- பாம்புக்கு மூப்பு இல்லை.
- Snakes have no chiefs.
-
- பாம்பு கடிக்கத் தேளுக்குப் பார்க்கிறதோ?
- When bitten by a snake, will the incantations suited to scorpion bites avail aught?
-
- பாம்புக்கு இராசா மூங்கில் தடி.
- A bambu stick is king to a snake.
-
- பாம்புக்குச் சத்துரு பஞ்சமா?
- Are the enemies of snakes few?
-
- பாம்புக்குத் தலையைக் காட்டி மீனுக்கு வாலைக் காட்டி.
- Showing the head to snakes, and the tail to fish.
- Spoken of a two-faced person, in allusion to an eel that shows its serpent-like head to snakes, and its fish-like tail to fish.
-
- பாம்புக்குப் பால் வார்த்து வளர்த்தாலும் விஷத்தைக் கொடுக்கும்.
- Though you feed a snake with milk, it will yield poison.
-
- பாம்புக்குப் பால் வார்த்ததுபோல.
- Like pouring out milk to a snake.
-
- பாம்பும் கீரியும்போல.
- Lik a snake and a mungoose.
-
- பாம்பும் கீரியும்போலப் பல காலம் வாழ்ந்தேன்.
- I lived a long time with him or her as a snake with a mungoose.
-
- பாம்பு தன் பசியை நினைக்கும் தேரை தன் விதியை நினைக்கும்.
- The snake has regard to its hunger, the frog thinks of its fate.
-
- பாம்பு பசிக்கில் தேரையைப் பிடிக்கும். அதுபோல, சிறியோர்
- When a snake is hungry it will catch a frog, so the vile perform only mean acts.
-
- பாம்பு தின்கிற ஊரிலே போனால் நடு முறி நமக்கு என்று இருக்கவேண்டும்.
- If we go to a country of snake eaters, we must be prepared for the middle bit.
-
- பாம்பு பகையும் தோல் உறவுமா?
- Is the snake hostile, and its skin friendly?
-
- பாம்புக்குப் பகை கருடன்.
- The hawk is inimical to the snake.
-
- பாம்பும் நோவாமற் பாம்பு அடித்த கோலும் நோவாமல் இருக்கவேண்டும்.
- So strike that neither the snake, nor the staff with which you strike, shall be hurt or injured.
-
- பாம்பு என்றால் படையும் நடுங்கும்.
- Even an army will tremble at the word snake.
-
- பாம்பொடு பழகேல்.
- Have nothing to do with snakes.
-
- பாய்கிற மாட்டுக்கு முன்னே வேதம் சொன்னாற்போல.
- Like reciting a portion of the vedas, to a cow about to gore you.
-
- பாய்மரம் சேர்ந்த காகம்போல் ஆனேன்.
- I have become like a crow on the top of a mast.
-
- பாய்மரம் இல்லா மரக்கலம்போல.
- Like a vessel without a mast.
-
- பாரபுத்தி உள்ள பறவை பதரால் பிடிக்கப்பட்டது.
- A wise bird has been caught with chaff.
-
- பாராத உடைமை பாழ்.
- Property not looked after perishes.
-
- பாரைக்கு ஊடாடாப் பாறை பசுமரத்தின் வேருக்கு ஊடாடிவிடும்.
- The rock that resists-a’ crowbar, gives way to the roots of a tender plant.
-
- பார் ஆளலாமென்று பால் குடிக்கிறாய்.
- Thou drinkest milk, hoping to govern the world.
-
- பார்க்கக் கொடுத்த பணத்துக்கு வெள்ளிக்கிழமையா?
- Is Friday a sufficient excuse for not returning the coin given you to look at?
- It is believed by many that, though it is fortunate to receive money on Friday, it is unfortunate to pay it.
-
- பார்க்கிற கண்ணுக்குக் கேட்கிற செவி பொல்லாது.
- A listening ear, is worse than a seeing eye.
-
- பார்த்த கண்ணும் பூத்துப் பகலும் இரவு ஆயிற்று.
- The eyes have failed by looking too long, and night has followed the day.
-
- பார்த்த முகம் எல்லாம் வேற்றுமுகம்.
- All the faces we see are diverse from one another.
-
- பார்த்தாற் பசுப்போல, பாய்ந்தால் புலிப்போல.
- In appearance like a cow, in action like a tiger.
-
- பார்த்திருக்கத் தின்று விழித்திருக்கக் கை கழுவுவான்.
- Gazed at-by starving beggars-he eats and washes his hands.
-
- பார்த்திருந்தவள் பச்சை குத்தினாள், கேட்டிருந்தவள் வறுத்துக் குத்தினாள்.
- She who had seen the process pounded it undried, she who had heard of it pounded roasted.
-
- பார்ப்பதற்கு அரிய பரப் பிரமம்.
- It is impossible to comprehend the supreme Brahma.
-
- பார்ப்பாத்தி அம்மா மாடு வந்தது.
- Brahman matron, the cow has come.
-
- பார்ப்பாத்தி உப்புக்கண்டம் போக்கடித்ததுபோல.
- As a brahman woman lost her salted mutton.
-
- பார்ப்பார் சேவகமும் வெள்ளைக் குதிரைச் சேவகமும் ஆகாது.
- The service of a brahman, and the care of a white horse are bad.
-
- பார்ப்பானுக்கு வாய்போக்காதே ஆண்டிக்கு அதுதானும் சொல்லாதே.
- Do not waste your breath on a a brahman, nor converse with a mendicant.
-
- பார்ப்பான் கறுப்பும் பறையன் சிவப்பும் ஆகாது.
- A black brahman, and a fair pariah are not trustworthy.
-
- பார்ப்பான் ஏழையோ பசு ஏழையோ?
- Which is the more helpless, a brahman or a cow?
-
- பாலருக்குப் பலம் அழுகை, மட்சத்துக்குப் பலம் உதகம்.
- The strength of a child is crying, and that of fish is water.
-
- பாலர் மொழி கேளாதார் குழல் இனிது யாழ் இனிது என்பார்.
- Those who have not heard the lisping of their own children say, that the flute is sweet, the stringed instrument is sweet.
-
- பாலான நெஞ்சு எல்லாம் பகை ஆக்கினான்.
- He has made enemies of all whose hearts are pure as milk.
-
- பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன்.
- He is the guard of the milk, and also the friend of the cat.
-
- பாலுக்கு வந்த பூனை மோரைக் குடிக்குமா?
- Will the cat that has come for new milk, drink buttermilk?
-
- பாலுக்குச் சீனி இல்லை என்றோர்க்கும் கூழுக்குக் கறி இல்லை என்றோர்க்கும் விசாரம் ஒன்றே.
- The care of those who want sugar with milk, and of those who want curry for their rice, are the same.
-
- பாலுமாம் மருந்துமாம்.
- It is of use both as milk and medicine.
-
- பாலும் பதக்கு , மோரும் பதக்கோ ?
- Is the rate of fresh milk that of buttermilk?
-
- பாலும் வெள்ளை மோரும் வெள்ளை.
- Milk is white and buttermilk is also white.
-
- பாலை ஊட்டுவார்கள் பாக்கியத்தை ஊட்டுவார்களா?
- They may feed him with milk; can they feed him with good fortune?
-
- பாலைக்குடித்தவனுக்குப் பால் ஏப்பம் வரும், கள்ளைக் குடித்தவனுக்குக் கள் ஏப்பம் வரும்.
- He who has drank milk will belch milk, and he who has drank toddy will belch toddy.
-
- பாலைப் பார்க்கிறதா பானையைப் பார்க்கிறதா?
- Do you examine the milk or the vessel containing it?
-
- பாலொடு கலந்த நீரும் பாலாகும்.
- Water mixed with milk looks like milk.
-
- பாலோடாயினும் காலம் அறிந்து உண்.
- Though with milk, take your meals at the proper time.
-
- பால் ஆரியனுக்கு, பசு ராமநாதசுவாமிக்கு.
- Milk to an Aryan, and a cow for Rámanádaswámi.
-
- பால் இருக்கிறது பாக்கியம் இருக்கிறது, பாலிலே போட்டுக் குடிக்கப் பத்துப் பருக்கைக்கு வழி இல்லை.
- There is milk and money, but no means for procuring ten grains of rice.
-
- பால் தொட்டுப் பால் கறக்கவேண்டும்.
- One must draw milk after moistening the fingers with milk.
-
- பால் நக்காத பூனையும் பரிதானம் வாங்காத பிராமணனும் உண்டா ?
- Is there a cat that will not lap milk, or a brahman that will refuse a bribe?
-
- பால் பசுவைக் கன்றிலே தெரியும், பாக்கியவான் பிள்ளையை முகத்திலே தெரியும்.
- The milch cow is known by its calf, and the child of the wealthy by its face.
-
- பால் வார்த்து முழுகுவான்.
- He will bathe after applying milk to the head.
- Intimating that a person inimical has been got rid of.
-
- பாவட்டம் பூப்போல நரைத்தும் புத்தி இல்லை.
- Though as grey as a pávattam flower, he has no sense.
-
- பாவத்திற்கு இடம் கொடாதவன் பாவத்தைச் செயங்கொள்வான்.
- He who does not give place to sin, will conquer it.
-
- பாவம் செய்யாதிரு, மனமே!
- O my heart, do not sin!
-
- பாவலர் அருமை நாவலர் அறிவார்.
- The ability of a poet is best known to the learned.
-
- பாவியார் போன இடம் எல்லாம் பள்ளமும் திட்டியும்.
- Whithersoever the simple go, they meet with ups and downs.
-
- பாவியைப் பிடித்துப் பாம்பு ஆட்டுகிறது.
- Seizing a simpleton and making him dance like a snake.
-
- பாவில் இருக்கிறது பார்த்தும் இருக்கிறது.
- That which is described in poetry is also seen in nature.
-
- பாழாய்ப் போகிறது பசுவின் வாயிலே.
- That which is spoiled is put in the mouth of a cow.
-
- பாழ் ஊருக்கு நரி ராஜா
- The jackal is king in a deserted village.
-
- பானையில் உண்டானால் அகப்பையில வரும்.
- If in the pot, it will come into the spoon.
-
- பானையிலே பதக்கு நெல் இருந்தால் மூலையிலே முக்குறுணி தெய்வம் கூத்தாடும்.
- If there be a pathaku of rice in the pot, three kurunies of gods will dance in the corner.