Jump to content

Tamil Proverbs/பி

From Wikisource
Tamil Proverbs
translated by Peter Percival
பி
3769822Tamil Proverbs — பிPeter Percival

பி.

  1. பிசினி தன்னை வசனிப்பது வீண்.
    It is useless to extol a miser.

  2. பிச்சன் வாழைத் தோட்டத்திலே புகுந்ததுபோல.
    As a madman entered the plantain grove.

  3. பிச்சைக்காரனுக்குப் பயப்பட்டு அடுப்பு மூட்டாமல் விடுகிறதா?
    Through fear of beggars do you refrain from lighting your fire?

  4. பிச்சைக்காரனை அடித்தானாம் சோளையைப்போட்டு உடைத்தானாம்.
    It is said that he beat the mendicant and broke his alms-dish.

  5. பிச்சைக்காரன் சோற்றிலே சனீச்சுரன் புகுந்ததுபோல.
    As Saturn entered into the rice of the mendicant.

  6. பிச்சைச் சோற்றிலும் எச்சிற் சோறா?
    What! scrupulous about leavings in rice got by begging?

  7. பிச்சைக்காரன்மேலே பிரமாஸ்திரம் தொடுக்கிறதா?
    Is an enchanted arrow discharged at a mendicant?

  8. பிச்சைக்கு வந்தவன் பெண்ணுக்கு மாப்பிள்ளையா?
    Do you propose giving your daughter in marriage to one who came to ask alms?

  9. பிச்சைக்கு மூத்தது கச்சவடம்.
    Merchandize is a little better than begging.

  10. பிச்சைச் சோற்றிலும் குழைந்த சோறா?
    Is rice offered in charity refused because it is overboiled?

  11. பிச்சைச் சோற்றிற்குப் பஞ்சம் உண்டா?
    Is rice given in charity ever scarce?

  12. பிச்சை போட்டது போதும் நாயைக் கட்டு.
    The alms given are sufficient; tie up the dog.

  13. பிச்சை புகினும் கற்கை நன்றே.
    Learning is good even when one is reduced to begging.

  14. பிச்சை இட்டுக் கெட்டவனும் உண்டா?
    Has any one been ruined by giving alms?

  15. பிச்சை இட்டுக் கெட்டவனும் இல்லை, பிள்ளை பெற்றுக் கெட்டவனும் இல்லை.
    None is ruined by giving alms; none is ruined because he has a family.

  16. பிச்சை எடுத்தும் சத்துருவின் குடி கெடு.
    Though you have to beg, destroy the family of your enemy.

  17. பிடாரம் பெரிதென்று புற்றிலே கை வைக்கலாமா?
    Relying on the efficacy of the prescribed remedy, will you put your hand in a snake hole?

  18. பிடாரனுக்கு அஞ்சிப் பாம்பு எலிக்கு உறவு ஆச்சுதாம்.
    It is said that a snake afraid of the charmer, sought the friendship of a rat.

  19. பிடாரியாரே கடா வந்தது.
    O, demon, the bull has come.

  20. பிடாரி வரம் கொடுத்தாலும் ஒச்சன் வரம் கொடுக்கிறது அரிது.
    Though a pidári may grant a favour, it will be difficult to obtain it through the priest.

  21. பிடி அழகி புகுந்தால் பெண் அழகி ஆவாள்
    If a woman ornamented with jewels enter, she will be regarded as a beautiful woman.

  22. பிடிக்குப்பிடி நமசிவாயமா.
    Are incantations to be used again and again.

  23. பிடித்த கொம்பும் விட்டேன் மிதித்த கொம்பும் விட்டேன்.
    I have left the branch I had seized, and also the one on which I was standing.

  24. பிடித்த கொம்பும் ஒடிந்தது மிதித்த கொம்பும் முறிந்தாற்போல் ஆனேன்.
    I have become as helpless as if the branch I seized, and the one I stood upon, both broke at the same time.

  25. பிடித்தாற் கற்றை, விட்டாற் கூளம்
    If tied, a bundle; if loose, bits of straw.

  26. பிக்ஷாபதியோ லக்ஷாபதியோ?
    Is he the prince of beggars, or the first as possessing lacs?

  27. பிணத்தை மூடி மணத்தைச் செய்.
    Bury the corpse, and then celebrate the marriage.

  28. பிணம் போகிற இடத்தே துக்கமும் போகிறது.
    Sorrow goes away to the place whither the corpse has gone.

  29. பிணைப்பட்டுக் கொள்ளாதே பெரும்பவத்தை உத்தரிப்பாய்.
    Do not stand security, it will lead to endless evils.

  30. பிண்டத்துக்குக் கிடையாதது தெண்டத்துக்கு அகப்படும்
    That which cannot be obtained for sustenance, will be found to pay a fine.

  31. பித்தம் பத்து விதம்.
    Madness is of ten kinds i. e., many kinds.

  32. பித்தளை நாற்றம் அறியாது.
    Brass is innocent of its own odour.

  33. பித்தர்க்குச் சில புத்திகள் சொன்னால் பேச்சைக் கேட்பாரா?
    If advice be given to fools will they iisten to it?

  34. பித்தனுக்குத் தன் குணம் நூலினும் செவ்வை.
    The madman thinks his own character straighter than a line.

  35. பிரமசாரி ஓடம் கவிழ்த்ததுபோல.
    As the brahmachari upset the boat.

  36. பிரமா நினைத்தால் ஆயுசுக்குக் குறையா?
    If Brahma wills it, is there any chance of your life being short?

  37. பிழைக்கப்போன இடத்திலே பிழைமோசம் வந்ததுபோல.
    As a grave occurrence befell one in the place to which he had gone for a livelihood.

  38. பிள்ளைக்காரன் பிள்ளைக்கு அழுகிறன் பணிசெய்வோன் காசுக்கு அழுகிறான்.
    The parent weeps on account of his child, the servant weeps for his hire.

  39. பிள்ளைக்கு விளையாட்டுச் சுண்டெலிக்குப் பிராண சங்கடம்.
    That which is sport to the child, is death to the mouse.

  40. பிள்ளை பதினாறு பெறுவாளென்று எழுதி இருந்தாலும், புருஷசன் இல்லாமல் எப்படிப் பெறுவாள்?
    Though it were written in the horoscope that she would have sixteen children, how could that be without a husband?

  41. பிள்ளை பெற்றவனுக்கும் மாடு படைத்தவனுக்கும் வெட்கம் இல்லை.
    A parent and a cowherd know no shame.

  42. பிள்ளை பெற்றவளைப் பார்த்துப் பெருமூச்சு விட்டு ஆவது என்ன?
    What if you look at her who has borne a child, and sigh?

  43. பிள்ளை அருமை மலடி அறிவாளா?
    Does a barren woman understand the endearments of a child?

  44. பிள்ளையாருக்குப் பெண் கொள்வதுபோல.
    Like obtaining a wife for Ganésha.

  45. பிள்ளையாரைப் பிடித்த சனி அரசமரத்தையும் பிடித்ததுபோல.
    As Saturn who had seized Ganésha seized also the tree-ficus Indica.

  46. பிள்ளையார் கோவிலில் திருடன் இருப்பான், சொன்னாலும் கோள்.
    The thief has taken refuge in the temple of Pillaiyár, it would however be a slander to mention it.

  47. பிள்ளையார் பிடிக்கக் குரங்காய் முடிந்தது.
    The attempt to form an image of Ganésha, ended in the formation of a monkey.

  48. பிள்ளை இல்லா வீட்டில் கிழவன் துள்ளி விளையாடுகிறானாம்.
    It is said that in the house in which there are no children, an old man plays like a child.

  49. பிள்ளையும் புழுக்கையும் சரி, பிள்ளைக்கும் புழுக்கைக்கும் இடங்கொடாதே.
    A child and a slave are alike, be not indulgent to a child or a slave.

  50. பிள்ளையும் கிள்ளித் தொட்டிலும் ஆட்டுகிறதா?
    Do you rock the cradle, while pinching the child?

  51. பிள்ளையைச் சாக்கிட்டுப் பூதம் விழுங்குகிறது.
    Pretending to feed the child, the goblin swallows it.

  52. பிள்ளைவரத்திற்குப் போய் புருஷனைப் பறிகொடுத்ததுபோல.
    Like losing her husband, when she went to ask the gift of offspring.

  53. பிள்ளைவருத்தம் பெற்றவளுக்குத் தெரியும் மற்றவளுக்குத் தெரியுமா?
    A mother knows the pain of travail, is it known to others?

  54. பிள்ளைவீட்டுக்காரர் சம்மதித்தால் பாதி விவாகம் முடிந்ததுபோல.
    If the family of the bridegroom consent, half the ceremony of marriage is over.

  55. பிறக்கிறபொழுதே முடம் ஆனால் பேய்க்கு இட்டுப் படைத்தால் தீருமா?
    If a person be a cripple from his birth, can he be cured by offerings made to demons?

  56. பிறந்த பிள்ளை பிடி சோற்றிற்கு அழுகிறது, பிறக்கப்போகிற பிள்ளைக்குத் தண்டை சதங்கை தேடுகிறார்களாம்.
    It is said that they are making silver bells for the child about to be born, while the child on the lap is crying for a handful of rice.

  57. பிறந்தவன் இறப்பதே நிசம்.
    It is certain that he who is born will die.

  58. பிறந்தன இறக்கும் தோன்றின மறையும்.
    Those who are born will die, what is visible will vanish.

  59. பிறந்த அன்றே இறக்கவேண்டும்.
    The day of birth leads to death.

  60. பிறந்த ஊருக்குச் சேலை வேண்டாம், பெண்டு இருந்த ஊருக்குத் தாலிவேண்டாம்.
    A sumptuous cloth is not required in one’s native village, nor a tàli where one is known as a wife.

  61. பிறர் பொருளை இச்சிப்பான தன் பொருளை இழப்பான்.
    He who covets the property of others, will lose his own.

  62. பிறர்மனைத் துரும்புகொள்ளான் பிராமணன் தண்டுகொண்டான்
    He who would not carry off a rush belonging to another's roof, robbed a brahman his master of his staff.

  63. பிறவிச் செவிடனுக்குப் பேசத் திறமுண்டா?
    Are there any clever of speech who were born deaf?

  64. பிறவிக் குருடனுக்குக் கண் கிடைத்ததுபோல.
    As one born blind received sight.

  65. பிறன் மனை புகாமை அறம் எனத் தகும்.
    Not going to another man’s house, deserves to be called virtue.

  66. பின்னாலே வரும் பலாக்காயினும் முன்னாலே வரும் களாக்காய் நலம்.
    A kalàkkày is better in hand, than a jack fruit in prospect.

  67. பிள்ளை என்பதும் பேசாதிருப்பதும், இல்லை என்பதற்கு அடையாளம்.
    By and by, and silence, are tantamount to a refusal.