Tamil Proverbs/பூ
Appearance
பூ.
-
- பூ அரசு இருக்கப் பொன்னுக்கு அழுவானேன்?
- Why weep for gold while you have the tulip tree?
-
- பூசணிக்காய் அத்தனை முத்துக் காதில் ஏற்றுகிறதா மூக்கிற் ஏற்றுகிறதா?
- If a pearl be as large as a pumpkin, where is it to be worn, in the ear or in the nose?
-
- பூசணிக்காய் எடுத்தவனைத் தோளிலே காணலாம்.
- If one has taken a pumpkin, its mark may be seen on his shoulder.
-
- பூசணிக்காய் அழுகினதுபோல.
- Like a decayed pumpkin.
-
- பூசப் பூசப் பொன் நிறம்.
- The more you gild it, the more like gold will it appear.
-
- பூசாரி பூ முடிக்கப் போனானாம், பூ ஆலங்காடு பலாக் காடாய்ப் போச்சுதாம்.
- The priest began to wear flowers, and the flower garden became a grove of jack trees.
-
- பூசை முகத்திலே கரடியை விட்டு ஓட்டினதுபோல.
- Like driving a bear among those engaged in worship.
-
- பூச்சி மரிக்கிறதில்லை, புழுவும் சாகிறதில்லை.
- Insects do not perish, nor do worms die.
-
- பூட்டிப் புசிக்காமற் புதைப்பார் ஈயைப்போல் ஈட்டி இழப்பார்.
- Those who lock up their treasure and refuse to enjoy it will be deprived of it, as bees are deprived of their honey.
-
- பூட்டும் திறப்பும்போல.
- As a lock and its key.
-
- பூதலம் யாவும் போற்று முச்சுடர்.
- The three lights which the whole world extol.
-
- பூத்தானமான பிள்ளை ஆத்தாளைத் தாலிக் கட்டிற்றாம்.
- It is said that an indulged child tied a tali on his mother.
-
- பூத்துச் சொரியப் பொறுப்பார்கள் பூட்டிக் கட்டக் கலங்குவார்கள்.
- They can endure seeing their tree shedding its blossoms, but will be disquieted at seeing others string and wear them.
-
- பூமி அதிர நடவாத புண்ணியவான்.
- A virtuous person under whose footsteps the earth trembles not.
-
- பூமி திருத்தி உண்.
- Till the soil, and enjoy its produce.
-
- பூராடக்காரனோடு போராட முடியாது.
- One cannot strive with one born under the star purádam.
-
- பூரியோர்க்கு இல்லைச் சீரிய ஒழுக்கம்.
- The base are void of good manners.
-
- பூர்வோத்தரம் மேரு காத்திரம் போல் இருக்கிறது.
- His pedigree is weighty as mount Meru.
-
- பூலோகமுதலியார் பட்டம், புகுந்து பார்த்தால் பொட்டல்.
- His title is lord of the world, but when examined he is found empty.
-
- பூ விற்கும் கடையில் புல் விற்பதுபோல.
- As grass is sold in a flower market.
-
- பூ விற்ற கடையில் புல் விற்கலாமா?
- May grass be sold in the flower market?
-
- பூ விற்ற காசு மணக்குமா புலால் விற்ற காசு நாறுமா?
- Is the money obtained from the sale of flowers fragrant, does that obtained from the sale of flesh stink?
-
- பூ விற்றவனைப் பொன் விற்கப்பண்ணுவேன்.
- I will enable him who sold flowers to sell gold.
-
- பூவுடன் கூடி நாரும் மணம் பெற்றதுபோல.
- As a fibre used for stringing flowers partook of their fragrance.
-
- பூவுள் மங்கையாம் பொற்கொடியாம் போன இடம் எல்லாம் செருப்படியாம்.
- It is said that she is Lackshmi residing in flowers, and she is a golden creeper, yet whithersoever she goes she is slippered.
-
- பூனை உள்ள இடத்திலே எலி பேரன் பேர்த்தி எடுக்கிறதாம்.
- The rat lives to see its grand-sons and grand-daughters in a place where there is a cat.
-
- பூனை கட்டும் தொழுவத்தில் ஆனை கட்டலாமா?
- Can you tether an elephant in a place suited for tying up a cat?
-
- பூனைக்கு இல்லை தானமும் தவமும்.
- Alms-giving and penance are not prribed to cats.
-
- பூனைச்குக் கொண்டாட்டம் எலிக்குத் திண்டாட்டம்.
- Amusement to the cat, and agony to the rat.
-
- பூனைக்குச் சிமாளம் வந்தால் பீற்றற்பாயில் புரளுமாம்.
- It is said that if a cat be merry, she will roll about on an old mat.
-
- பூனை பால் குடிக்கிறதுபோல.
- As a cat drinks milk.
-
- பூனைபோல் அடங்கினான் புலிபோல் பாய்ந்தான்.
- He was quiet as a cat, and sprang like a tiger.
-
- பூனையைக் கண்ட கிளிபோலப் புலம்பி அழுகிறான்.
- He cries as a parrot encountered by a cat.
-
- பூனையைத்தான் வீட்டுப் புலியென்றும், எலி அரசனென்றும் சொல்வார்கள்.
- A cat is called a domestic tiger, and the king of rats.