Jump to content

Tamil Proverbs/பெ

From Wikisource
Tamil Proverbs
translated by Peter Percival
பெ
3768618Tamil Proverbs — பெPeter Percival

பெ.

  1. பெட்டியிற் பாம்புபோல் அடங்கினான்.
    He was as quiet as a snake in a box.

  2. பெட்டி பீற்றல் வாய்க் கட்டுத் திறம்.
    The basket is torn, but the rim is strong.

  3. பெட்டைக் கோழி கூவியோ விடிகிறது?
    Does the day break at the crowing of a hen?

  4. பெட்டைக் கோழி தட்டிக் கூவுமா?
    Can a hen flap her wings and crow like a cock?

  5. பெண் என்றால் பேயும் இரங்கும்.
    Even a demon will pity a woman.

  6. பெண்ணாசை ஒரு பக்கம் மண்ணாசை ஒரு பக்கம்.
    Love of women on the one hand, and love of property on the other.

  7. பெண்சாதி இல்லாதவன் பேயைக் கட்டித் தழுவினது போல.
    As the man who had no wife embraced a demoness.

  8. பெண் சாதியைத் தாய் வீட்டில் விட்டவனுக்கு ஒரு சொட்டு.
    A cuff for the man who left his wife at her mother’s.

  9. பெண்சாதி காற்கட்டு, பிள்ளை வாய்க்கட்டு.
    Fettered with a wife, and muzzled with a child.

  10. பெண்டாட்டி கொண்டதும் திண்டாட்டம் பட்டதும் போதும்.
    Enough of taking a wife and suffering the consequences.

  11. பெண்டிர்க்கு அழகு பேசாதிருத்தல்.
    Not to remonstrate with her husband is an ornament in a woman.

  12. பெண்டுகள் சூத்துக்குப் புரிமணை.
    A straw twist for women to squat on.

  13. பெண்டுகளுக்கு பெற்றார் இடத்திலும் பிள்ளைகள் இடத்திலும் மூப்பு இல்லை.
    Women have no influence over parents and children.

  14. பெண்டுகள் சோற்றுக்குத் தண்டம் இல்லை.
    Women are not in danger of forfeiting their rice.

  15. பெண்ணரம்பைக் கூத்துக்குப் போய் பேய்க் கூத்து ஆச்சுதே.
    The going to a dance of celestials ended as a dance of devils.

  16. பெண்ணின் குணம் அறிவேன் சம்பந்தி வாய் அறிவேன்.
    I know the character of the bride, and the boisterousness of her mother-in-law.

  17. பெண்ணுக்குப் பொன் இட்டுப்பார், சுவருக்கு மண் இட்டுப்பார்.
    Look at a woman after adorning her with jewels, and at a wall when you have plastered it with mud.

  18. பெண்ணுக்கும் பொன்னுக்கும் தோற்பு உண்டா?
    Is any one ever tired of women and wealth?

  19. பெண்ணுக்குப் போய்ப் பொன்னுக்குப் பின்வாங்கலாமா?
    Having gone to take a wife, can you turn back because marriage is expensive?

  20. பெண்ணுக்கு மாமியாரும், பிள்ளைக்கு வாத்தியாரும்.
    For a wife, a mother-in-law, for a boy, a tutor.

  21. பெண்ணைக் கொடுத்தவளோ கண்ணைக் கொடுத்தவளோ?
    Did she give one a wife, or did she give one her eye?

  22. பெண்ணைப் பிழை பொறுக்கப் பெற்றதாய் வேண்டாமோ?
    Are you content to lose your mother in order to pardon your wife?

  23. பெண்ணைக் கொண்டு பையன் பேயானான், பிள்ளைப் பெற்றுச் சிறுக்கி நாயானாள்.
    Having married a wife the boy has become a fool, having given birth to a child the damsel has become mean in appearance.

  24. பெண்ணை வேண்டும் என்றால் இளியற் கண்ணை நக்கு.
    If you want the woman, lick her bleared eyes.

  25. பெண் புத்தி கேட்கிறவன் பேய்.
    He who listens to the advice of women is a fool.

  26. பெண் புத்தி பின் புத்தி.
    The thoughts of women are after-thoughts.

  27. பெண் வளர்த்தி பீர்க்கங்கொடி.
    The growing of women is that of a gourd creeper.

  28. பெரியாரைத் துணைக்கொள்.
    Secure the good will of the great.

  29. பெரியோர் எல்லாம் பெரியரும் அல்லர்.
    All who are high in stature are not great.

  30. பெரியோர்முன் தாழ்ந்து பேசில், நாணலைப்போல் நிமிர்ந்து கொள்வார்கள்.
    When speaking submissively to the great, they preserve an erect posture like a reed.

  31. பெரியோர் முன் எதிர்த்துப்பேசில், வெள்ளத்திற்க்குமுன் மரங்களைப்போல் வீழ்வார்கள்,
    If they should contradict the great, they will fall like trees before a flood.

  32. பெருங் கயிறு முடி அழுந்தாது.
    A tight knot cannot be formed in a thick rope.

  33. பெருங்காயம் இருந்த பாண்டம்.
    An earthen pot in which assafœtida was kept.

  34. பெருங் காற்றில் பீளைப்பஞ்சு பறக்கிறது போல.
    Flying like cotton before a gale of wind.

  35. பெருங் குலத்தில் பிறந்தாலும் புத்தி அற்றவன் கரும்புப் பூப்போல.
    Though born in a high family, a fool is like a sugar-cane flower.

  36. பெருங் கொடை பிச்சைக்காரருக்குத் துணிவு.
    Beggars presume on large gifts.

  37. பெரு நெருப்புக்கு ஈரம் உண்டா?
    Will moisture affect a great fire.

  38. பெரு மரத்தைச் சுற்றிய வள்ளிக்கொடிபோல.
    Like a creeping plant-Dioscorea sativa-round a large tree.

  39. பெரு மழை விழுந்தாற் குளிராது.
    No feeling of cold in a heavy fall of rain.

  40. பெருமாள் இருக்கிற வரையில் திருநாள் உண்டு.
    As long as Perumal exists holy days will be observed.

  41. பெருமாள் என்கிற பெயரை மாற்றப் பெரிய பெருமாள் ஆச்சுது.
    The name Perumal being changed has become great Perumal.

  42. பெருமானைச் சேர்ந்தோர்க்கு பிறப்பு இல்லை, பிச்சைச் சோற்றிற்கு எச்சில் இல்லை.
    Those who have attained union with God are not subject to future births, rice given in alms is not refused because it is refuse.

  43. பெருமாள் நினைத்தால் வாழ்வு குறைவா, பிரமா நினைத்தால் ஆயுசு குறைவா?
    If God is pleased, will there be any lack of prosperity, if Brahma favour, will one’s life be short?

  44. பெருமைதான் அருமையை குலைக்கும்.
    Pride will diminish one’s worth.

  45. பெருமையான தரித்திரன் வீண்.
    Pride in a poor man is vain.

  46. பெருமை ஒரு முறம் புடைத்து எடுத்தால் ஒன்றும் இல்லை.
    When a sieve, full of pride, is sifted, nothing remains.

  47. பெருமையும் சிறுமையும் வாயால் வரும்.
    The great and the little come from the mouth.

  48. பெருமைக்கு ஆட்டை அடித்துப் பிள்ளை கையில் காதைச் சுட்டுக் கொடுத்தான்.
    He killed a sheep to show his greatness, and gave the ear to his child after roasting it.

  49. பெரு ரூபத்தை உடையவரும் பிரயோசனமாய் இருக்கமாட்டார். அதுபோல, பனை விதை பெரிதாய் இருந்தும் நிழல் கொடுக்கமாட்டாது.
    The great are not always helpful, the lofty palmyrah casts no shade.

  50. பெரு வயிறு கொண்டது அறியாமல் சீமந்தத்திற்கு நாள் இட்டுக் கொண்டான்.
    Not knowing that his wife is affected with dropsy, he has fixed upon a day for the performance of her simantham ceremony.
    A ceremony relating to the first pregnancy, including bathing, the parting of the hair in the middle of the forehead, putting on jewels, &c., &c.

  51. பெற்ற தாய் இடத்திலோ கற்ற வித்தை காட்டுகிறாய்?
    Do you practise your arts on your mother?

  52. பெற்ற தாய் செத்தால் பெற்ற அப்பன் சிற்றப்பன்.
    If a mother dies, the father becomes uncle.

  53. பெற்ற தாய் பசித்திருக்கப் பிராமண போஜனம் செய்ததுபோல.
    Like feeding brahmans when one’s mother is starving.

  54. பெற்றது எல்லாம் பிள்ளையா இட்டது எல்லாம் பயிரா?
    Are all that are brought forth children, is all that is sown available for use?

  55. பெற்றது எல்லாம் பிள்ளையோ வளைந்தது எல்லாம் குசக்கலமோ?
    Are all that are brought forth children, is all earthen ware perfect that is fashioned by a potter?

  56. பெற்ற மனம் பித்து, பிள்ளை மனம் கல்லு.
    The mother’s heart is soft, that of her child is as a stone.

  57. பெற்றோர்க்கு இல்லைச் சுற்றமும் சினமும்.
    The wise are not moved by relationship or anger.