Tamil Proverbs/பே
Appearance
பே.
-
- பேசப் பேச எந்தப் பாஷையும் வரும்.
- Any language may be learnt by continual speaking.
-
- பேசாதிருந்தால் பிழை ஒன்றும் இல்லை.
- No fault arises if nothing is spoken.
-
- பேசில் அபலம் பேசாக்கால் ஊமை.
- When he speaks it is to no purpose, when he does not speak he is accounted dumb.
-
- பேச்சுக் கற்ற நாய் வேட்டைக்கு ஆகாது.
- A noisy dog is not fit for hunting.
-
- பேச்சுக்கு இராவணன் பின்பு கும்பகர்ணன்.
- In speech he is Ravana, but he turns out to be Kumbhakarnaan.
-
- பேச்சுக்குப் பேச்சுச் சிங்காரமா?
- Is contradiction becoming?
-
- பேச்சை விற்றுக் காய்ச்சிக் குடிக்கிறான்.
- He sells his words, and cooks and drinks.
-
- பேடி கையில் இருந்த ஆயுதம் போல.
- Like a weapon in the hands of a hermaphrodite.
-
- பேடி கையில் வாள்போலே.
- Like a sword in the hands of a hermaphrodite.
-
- பேதம் அற்றவர் நீதம் உற்றவர்.
- He who is impartial is just.
-
- பேதைகள் வெள்ளத்திலே நின்றும் தாகத்திற்குத் தண்ணீருக்கு அலைவார்கள்.
- Fools in the midst of a flood will wander about for water to drink.
-
- பேதமை என்பது மாதர்க்கு அணிகலம்.
- Simplicity is the ornament of a woman.
-
- பேயானாலும் தாய், நீரானாலும் மோர்.
- Though like a demon she is a mother, though mere slop, it is buttermilk.
-
- பேயும் சிலது ஞாயம் பகரும்.
- Even a demon will have some reason to assign.
-
- பேய் ஆடிய கம்பம்போல.
- Like a pole on which a demon dances.
-
- பேய் கொண்டாலும் பெண் கொள்ளல் ஆகாது.
- One may take a demon, but not take a wife.
-
- பேய்க்குக் கள் வார்த்ததுபோல.
- Like pouring out toddy to a demon.
-
- பேய்க்கு வேப்பிலைபோலே.
- As margosa leaves before a demon.
-
- பேய்க்கு வேலை இட்டதுபோல.
- Like setting a demon to work.
-
- பேய்க்கூத்தும் ஆமணக்கும் ஆள்போனால் ஆள் தெரியாது.
- A devil dance is a garden of castor oil plants, if one gets in he is not seen again.
-
- பேய் சிரித்தாலும் ஆகாது அழுதாலும் ஆகாது.
- If a demon smiles it is bad, and if he weep that too is inauspicious.
-
- பேய் பிடிக்கவும் பிள்ளை பிழைக்கவுமா?
- Will a child struck by a demon survive?
-
- பேய் போய்ப் புளியமரத்தில் ஏறினதுபோல.
- As a demon ascended a tamarind tree.
-
- பேராசைக்காரனைப் பெரும்புளுகால் வெல்லவேண்டும்.
- The avaricious must be overcome by notorious lies.
-
- பேராசை பெரிய நஷ்டம்.
- Avarice ends in loss.
-
- பேர் இல்லாச் சன்னதி பாழ், பிள்ளை இல்லாச் செல்வம் பாழ்.
- The presence of one without reputation does no good, wealth without a child is useless.