Tamil Proverbs/பொ
Appearance
பொ.
-
- பொக்கவாய்ச்சி மெச்சினாளாம் பொரிமாலை.
- It is said that a toothless dame appreciated the rice flour.
-
- பொங்கும் காலம் புளி பூக்கும், மங்கும் காலம் மா பூக்கும்.
- In times of plenty the tamarind tree blossoms, in times of scarcity the mango bears in abundance.
-
- பொதி அளக்கிறதற்குமுன்னே சத்தத்திற்கு அளக்கிறதா?
- Am I to measure out the hire, before measuring out the load?
-
- பொதியை வைத்து விட்டுப் பிச்சைக்குப் போனான், அதையும் வைத்து விட்டுச் செத்துக் கிடந்தான்.
- Having loaded his bullock, he went abegging; the product he put on one side, and died.
-
- பொதி வைக்கிறதற்கு முன்னே சத்தத்திற்கு அளக்கிறதா?
- Am I to measure out the hire before adjusting the load!
-
- பொத்தைச் சுரைக்காய்போலே.
- Like a fleshy gourd.
-
- பொய் இருந்து புலம்பும் மெய் இருந்து விழிக்கும்.
- Falsehood will never cease to weep, truth will ever be conspicuous.
-
- பொய் உடை ஒருவன் சொல் வன்மையினால் மெய்போலும்மே மெய்போலும்மே.
- The falsehood of a liar by reason of its force, may appear like truth, may appear like truth.
-
- பொய் சொன்ன வாய்க்குப் போசனம் கிடையாது.
- The mouth accustomed to lies will be deprived of food.
-
- பொய் சொன்ன வாய்க்குப் பொரியும் கிடையாது.
- The mouth accustomed to lies will be deprived of even parched corn.
-
- பொய் சொல்லி வாழ்ந்தவனும் இல்லை, மெய் சொல்லிக் கெட்டவனும் இல்லை.
- No one ever prospered by telling lies, no one was ever reduced to poverty by speaking truth.
-
- பொய் மெய்யை வெல்லுமா?
- Will falsehood conquer truth?
-
- பொய்யான பொருளாசை மெய்யான அருளாசையை விலக்குகிறது.
- The false love of money, will take away the real love of divine grace.
-
- பொய்யும் ஒரு பக்கம் பொறாமையும் ஒரு பக்கம்.
- Falsehood on one side, and envy on the other.
-
- பொய்யைச் சொன்னாலும் பொருந்தச் சொல்லவேண்டும்.
- Though you tell lies, do so consistently.
-
- பொருடனைப் போற்றிவாழ்.
- Preserve your substance and live.
-
- பொருளாசையும் மனச்சாட்சியும் பொருந்துமா?
- Will covetous desires and conscience agree?
-
- பொருளும் கொடுத்துப் பழியும் தேட.
- Giving one’s wealth and incurring censure.
-
- பொருளும் போகமும் கூடவராது புண்ணியமே கூடவரும்.
- Wealth and pleasure will be separated from us, but virtue will abide.
-
- பொருள் போன வழியே துக்கம் போம்.
- Whithersoever wealth goes, sorrow follows in the same path.
-
- பொல்லாத மனம் கேளாது.
- The wicked heart resists reproof.
-
- பொல்லாங்கு என்பவை எல்லாம் தவிர்.
- Avoid whatever is evil.
-
- பொல்லாத காலம் சொல்லாது வந்தது.
- Inauspicious times come without giving notice.
-
- பொல்லாதவர்கள் சினப்பட்டால் கல்வின் பிளவு போல ராசியாகமாட்டார்கள்.
- The anger of the wicked is like a fracture in a stone, they are not easily reconciled.
-
- பொல்லாத குணத்துக்கு மருந்து உண்டா?
- Is there any medicine for a bad temper?
-
- பொல்லாதவர்கள் சங்காத்தம் உப்பு மணலில் வீழ்ந்த நீர் போல.
- The friendship of the wicked is as bitter as water in brackish soil.
-
- பொல்லாப் பிள்ளையில் இல்லாப் பிள்ளை.
- A bad child is worse than none.
-
- பொழுது பட்ட இடம் விடுதி விட்ட இடம்.
- Halting where the sun sets.
-
- பொழுதுவிடிந்தது பாவம் தொலைந்தது.
- The day has dawned, sin is ended.
-
- பொறி வென்றவனே அறிவின் குருவாம்.
- He alone who conquers his senses is a teacher of wisdom.
-
- பொறுதி என்பது கடலிலும் பெரிது.
- Forbearance is greater than the ocean.
-
- பொறுத்தல் கசப்பாய் இருந்தாலும் பொறுக்கப் பொறுக்கத் தித்திப்பு.
- Although suffering may be bitter, continued endurance will make it sweet.
-
- பொறுத்தார் பூமி ஆள்வார்
- Those who put up with injuries may rule the earth.
-
- பொறுத்தார் அரசாள்வார் பொங்கினார் காடாள்வார்.
- They who endure will reign as kings, the irascible will wander through the jungles.
-
- பொறுமை புண்ணியத்திற்கு வேர் பொருளாசை பாவத்திற்கு வேர்.
- Patient endurance is the root of religious merit, avarice is the root of sin.
-
- பொற் கலம் ஒலிக்காது வெண் கலம் ஒலிக்கும்.
- A gold vessel does not sound, a brass one does.
-
- பொற் காப்புக்கு ஆசைப்பட்டுப் புலியின் கையில் அகப்பட்டது போல.
- Like one whose desire for a gold bracelet, hurried him into the claws of a tiger.
-
- பொற் பூவின் வாசனையும் முருக்கம் பூவின் வாசனையும் சரி.
- The smell of a flower of gold and that of the murukku flower are alike.
-
- பொற் பூ வாசிக்குமா?
- Does a golden flower diffuse fragrance?
-
- பொன் ஆபரணத்தைப் பாரக்கிலும் புகழ் ஆபரணமே பெரிது.
- The ornament of reputation is greater than ornaments of gold.
-
- பொன் இரவல் உண்டு, பூ இரவல் உண்டா?
- Gold may be lent, can flowers?
-
- பொன் என்றால் பிணமும் வாய் திறக்கும்.
- If the word gold be uttered, even a corpse will open its mouth.
-
- பொன்கத்தி என்று கழுத்து அறுத்துக்கொள்ளலாமா?
- May one cut his throat with a knife because it is made of gold?
-
- பொன் காத்த பூதம்போல.
- Like the demon that guarded treasure.
-
- பொன்செருப்பு ஆனாலும் காலுக்குத்தான் போடவேண்டும்.
- Though golden slippers, they must be put on the feet.
-
- பொன்மணி அற்றவளை அம்மணி என்பானேன்?
- Why should a woman who has no gold beads be called Ammani?
-
- பொன்முடி அல்லது சடை முடி வேண்டும்.
- One should wear either a gold crown, or matted hair.
-
- பொன்னம்பலம் உண்டானால் என்ன அம்பலம் கிடையாது?
- If one has a golden house, what house can he not get?
-
- பொன்னம்பலத்துக்கும் புவனகிரிப் பட்டணத்துக்கும் என்றைக்கும் உண்டான இழவு.
- The golden hall of-Chidambaram, and the town Puvanagiri, are always in trouble.
-
- பொன்னாங்காணிக்குப் புளி விட்டு ஆக்கினால் உண்ணாக்கு எல்லாம் தித்திக்கும்.
- If acid be mixed with ponnánkáni-Illecebrum sessile-its flavour will be agreeable to the whole palate.
-
- பொன்ணாங்காணிக்குப் புளி விட்டு ஆக்கினால் உண்ணாப் பெண்ணும் ஒரு உழக்கு உண்ணும்.
- The compound of ponnánkáni greens-illecebrum-and tamarind, will enable a girl who has lost her appetite to eat an ulak of rice.
-
- பொன்னான மனதைப் புண்ணாக்குகிறான்.
- He ulcerates the golden mind.
-
- பொன்னாலே கலம் உண்டானாலும் மண்ணாலே சுவர் வேண்டும்.
- Though one may possess vessels of gold, the wall of his house must be of mud.
-
- பொன்னாலே மருமகளானாலும் மண்ணாலே ஒரு மாமி வேண்டும்.
- Though the daughter-in-law is made of gold, she must have a mother-in-law made of earth.
-
- பொன்னின் கலப்பை வரகுக்கு உழப் போனதாம் வரகு சேருக்கு வரகு பட்டதாம்.
- Golden ploughs were used for the cultivation of the millet, and the crop was less than the seed-corn.
-
- பொன்னின் குடத்திற்குப் பொட்டு இட்டு பார்க்க வேண்டுமா?
- Must a royal mark be inscribed on a golden pot, that it may appear the more beautiful?
-
- பொன்னின் குடம் உடைந்தாற் பொன் ஆகும் என்ன ஆகும் மண்ணின் குடம் உடைந்தாக்கால்?
- Though broken to pieces a golden pot will still be gold, of what use is an earthen pot when broken?
-
- பொன்னை வைக்கிற கோயிலிலே பூவையாவது வைக்க வேண்டும்.
- Flowers, at least, must be offered in a temple in which gold is offered.
-
- பொன்னை எறிந்தாலும் பொடிக் கீரையை எறியலாமா?
- Although you may throw away gold, you may not throw away edible herbs!