Tamil Proverbs/போ
Appearance
போ.
-
- போகா ஊருக்கு வழி கேள்.
- Inquire the way to the village whither you are not going.
-
- போகாத இடத்திலே போனால் வராத சொட்டு வரும்.
- If you go where you ought not, you will receive a cuff that might have been avoided.
-
- போக்கணம் கெட்டவன் ராஜாவிலும் பெரியவன்.
- An impudent person is greater than a king.
-
- போக்கு அற்ற நாய்க்கு போனது எல்லாம் வழி.
- A hungry dog finds a way wherever be goes.
-
- போசனம் சிறுத்தாலும் ஆசனம் பெருக்க வேண்டும்.
- Though one’s food be slight, the dish must be large.
-
- போதகர் சொல்லைத் தட்டாதே, பாதகர் இல்லைக் கிட்டாதே.
- Obey your religious teacher, approach not the house of the wicked.
-
- போதகருக்கே சோதனை மிஞ்சும்
- A religious teacher meets with many temptations.
-
- போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து.
- A contented mind is a specific for making gold.
-
- போரில் ஊசி தேடின சம்பந்தம்.
- Akin to seeking a needle in a heap of straw.
-
- போரைக் கட்டிவைத்துப்போட்டுப் பிச்சைக்குப் போவானேன்.
- Having stacked your corn, why go abegging?
-
- போரோடு தின்கிற மாட்டுக்குப் பிடுங்கிப் போட்டுக் கட்டுமா?
- When an ox is accustomed to eat at a heap, will it be satisfied with a handful?
-
- போர்த்தொழில் புரியேல்.
- Do not practise the art of war.
-
- போர் பிடுங்கிறவர்கள் பூரக்களம் சாடுகிறவர்களை மாட்டுகிறார்களாம்.
- It is said that those who steal from a corn-stack, will frighten those who glean stealthily.
-
- போலைக்கு ஒரு பொன்மணி கிடைத்ததாம், அதைத் தூக்கக் கண்ணில் தொட்டுத் தொட்டுப் பார்த்ததாம்.
- It is said that the hollow-headed woman obtained a gold bead, and that she examined it when she was sleepy.
-
- போலை பொறுக்கப் போச்சாம் பூனை குறுக்கே போச்சாம்.
- It is said that the destitute went out to gather orts, and a cat went across the path.
-
- போனகம் என்பது தான் உழைத்து உண்டல்.
- That which one eats as the fruit of his own labour, is properly called food.
-
- போன சுரத்தைப் புளி இட்டு அழைத்ததுபோல.
- Like inviting a fever that has subsided, by giving acids.
-
- போனதை நினைக்கிறவன் புத்தி கெட்டவன்.
- He lacks sense who broods over the past.
-
- போன மாட்டைத் தேடுவாரும் இல்லை, மேய்த்த கூலி கொடுப்பாரும் இல்லை.
- There is no one to seek the lost cow, none to pay the hire of the cowherd.