Tamil Proverbs/மு
Appearance
மு.
-
- முகக் கோணலுக்குக் கண்ணாடி பார்த்தால் தீருமா?
- Will the distortion of the countenance be removed by looking into a mirror?
-
- முகத்துக்கு முகம் கண்ணாடி.
- One face is a mirror to another face.
-
- முகத்துக்கு அஞ்சி மூத்தாரோடு போனால் குலத்துக்கு எல்லாம் ஈனமாம்.
- If a woman elope with her husband’s elder brother out of personal regard for him, it will be a disgrace to the whole family.
-
- முகம் ஆகாதிருந்தால் கண்ணாடி என்ன செய்யும்?
- If the face be ugly, what can the mirror do?
-
- முகம் சந்திர பிம்பம்; அகம் பாம்பின் விஷம்.
- A face like the moon, a mind of deadly poison.
-
- முக்காட்டுக்குள் சமுதாடா?
- What! a dagger under a veil?
-
- முக்காட்டுக்குள்ளே கைக்காட்டா?
- What, is it to make signs under a veil?
-
- முக்காதம் சுமந்தாலும் முசல் கைக்தூக்குத்தான்.
- Though carried thirty miles, a hare is carried in the hand.
-
- முக்காலம் காகம் முழுகிக் குளித்தாலும் கொக்கு ஆகாது.
- Though a crew bathe three times a day, it will not thereby become a white crane.
-
- முக்காலம் காகம் முழுகிக் குளித்தாலும் கொக்கு ஆகுமா?
- Will a crow by bathing three times a day become a crane?
-
- முக்கூட்டுச் சிக்கு அறாது.
- A triparty business is always involved.
-
- முசலை எழுப்பி விட்டு, நாய் பதுங்கினதுபோல.
- Like a dog crouching after starting a hare.
-
- முடப்புல் முக்கல நீரைத் தடுக்கும்.
- Crooked grass prevents the flow of six kalams of water.
-
- முடவனுக்கு நொண்டி சண்டப்பிரசண்டன்.
- A lame man is very boisterous before a cripple.
-
- முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டதுபோல.
- As a lame man longed for the honey that hung from a branch.
-
- முடவன் சந்தைக்குப் போனாற்போல.
- Like a lame man going to market.
-
- முடிக்காதவனே படிக்காதவன்.
- He who does not accomplish his object lacks training.
-
- முடிச்சுப் போனதும் அல்லாமல் இளித்தவாய்ப்பட்டமும் கூடக் கிடைத்தது.
- You have not only lost the bundle of money, but also incurred a reproachful name.
-
- முடிய முடிய நட்டால் கோட்டை கோட்டையாய் விளையுமா?
- If you plant bundles, will heaps be produced?
-
- முடியும் வகை யோசியாமல் முயற்சி கொள்ளாதே.
- Never undertake a matter without due consideration as to how it is to be accomplished.
-
- முடி வைத்த தலைக்குச் சுழிசுத்தம் பார்க்கிறது, கொண்டு குலம் பேசுகிறதுபோல் இருக்கிறது.
- Examining the circlets of hair in a crowned head, is like discussing the tribe of a girl after marrying her.
-
- முட்ட நனைந்தவனுக்கு ஈரம் இல்லை, முழுதும் கெட்டவனுக்குத் துக்கம் இல்லை.
- When completely drenched one does not feel wet, when entirely ruined one feels no sorrow.
-
- முட்டரோடாடிய நட்புக் கருங்காலிக் கட்டை ஊடாடிய கால்.
- Friendship with the rude is like the foot of a traveller among stumps of ebony.
-
- முட்டற்ற பெண்ணுக்கு இரட்டைப் பரியமா?
- What double dower to a worthless woman?
-
- முட்டாளுக்கு இரண்டு ஆள்.
- Two persons for one fool.
-
- முட்டாளுக்குக் கோபம் மூக்கின்மேலே.
- The wrath of a fool is on his nose.
-
- முட்டிகைபோல முனியாது வைகலும், கொட்டி உண்டாகும் குறடுபோற் கைவிடுவார்.
- Even those who like a pair of pincers uphold their dependants and daily feed them, will leave them like a pair of tongs.
-
- முட்டி ஊட்டின கன்று முதர்க் கன்று.
- A calf that drains the udder is almost weaned.
-
- முட்டுக்கு முட்டல்ல மூடக் கதவும் அல்ல, சன்னிதிவாசலுக்குச் சார்த்தக் கதவும் அல்ல.
- It is neither an obstruction, nor a door to shut, nor even a screen to the temple gateway.
-
- முட்டுப்பட்டும் ஜெயம் வருமானால் குட்டுப்பட்டாற் குறை என்ன?
- If victory comes by being pressed with want, what matters a cuff on the head?
-
- முதலில் எடுத்துச் செலவிடாதே.
- Do not spend on your capital.
-
- முதலிலே கெட்டிக்காரன் முடிவிலே சோம்பேறி.
- Clever at the beginning, indolent at the end.
-
- முதலுக்கு மோசமாக இருக்கிறது இலாபத்துக்குச் சண்டை போடுகிறதா?
- When the principal is in danger, do you quarrel about the interest?
-
- முதலே துர்ப்பலை அதிலே கர்ப்பிணி.
- Already weak, and withal pregnant.
-
- முதலைக்கு இல்லை நீச்சும் நிலையும்.
- A crocodile cares not whether the water is deep or shallow.
-
- முதலை தன் இடத்து, மலை ஒத்த ஆனையையும் இழுத்துச் செல்லும்.
- In his own element, the alligator will carry off an elephant as big as a mountain.
-
- முதலை வைத்துப் பெருக்காத வணிகரைப்போல.
- Like merchants who do not increase the capital they invest.
-
- முதல் இல்லார்க்கு ஊதியம் இல்லை, மதலையாம் சார்ப்பில்லார்க்கு நிலை இல்லை.
- Those who have no capital have no gain, those who have no sons to lean on, have no support.
-
- முதல் இல்லார்க்கு ஊதியம் இல்லை.
- Those not possessed of capital, have no gains.
-
- முதல் எடுக்கும்போதே தப்பட்டைக்காரன் செத்தான்.
- When the funeral procession was moving forward, the tomtom beater died.
-
- முதல் எழுத்திலே வெள்ளெழுத்தா?
- What, dim-sighted at the beginning of the Alphabet?
-
- முதற் கோணல் முற்றும் கோணல்.
- If crooked at first, it will be so throughout.
-
- முதுகிலே புண் உண்டானால் செடியிலே நுழையப் பயம்.
- If one has a wound on his back, he will fear to pass under a bush.
-
- முத்தால் நத்தை பெருமைப்படும், மூடர் எத்தாலும் பெருமைப்படார்.
- A snail is precious by reason of its pearl, fools have naught wherewith to attain greatness.
-
- முத்திலும் சொத்தை உண்டு, பவழத்திலும் பழுது உண்டு.
- Flaws may be found in pearls and also in coral.
-
- முந்தி வந்த செவியைப் பிந்தி வந்த கொம்பு மறைத்ததாம்.
- It is said that the ears which came first, were covered by the horns which sprung up afterwards.
-
- முந்தினோர் பிந்தினோர் ஆவர் பிந்தினோர் முந்தினோர் ஆவர்.
- The first shall be last, and the last first.
-
- முந்தின சோத்தைத் தட்டினால் பிந்தின சோறு பீயும் சோறும்.
- If the first food be rejected, worse may be offered.
-
- முந்நாழி கறக்கிற பசுவானாலும் இறப்பைப் பிடுங்குகிற பசு ஆகாது.
- Though a cow yields three measures of milk, it is not desirable if it pulls down the roof.
-
- முப்பதிலே மூர்க்கம், நாற்பதிலே நாகரீகம்.
- Obstinacy at thirty, civility at forty.
-
- முப்பது பணம் கொடுத்தாலும் மூளிப்பட்டம் போகாது.
- Though one may give thirty fanams, the nickname, crop-eared, will not be removed.
-
- முப்பதிலே வாழ்ந்தவன் மூடன், முன்னும் பின்னும் தெரியாதவன் குருடன்.
- He is a fool who prospered at thirty, he is blind who does not see before and behind.
-
- முப்பணி இட்ட பெண்ணுக்குக் கொப்பு ஒன்றுதான் குறை.
- To the woman adorned with three jewels, the ear ornament is the only want.
-
- முப்பது வருஷம் வாழ்ந்தவனும் இல்லை, முப்பது வருஷம் தாழ்ந்தவனும் இல்லை.
- None ever continued to prosper or decay for thirty years.
-
- முப்பொருள் ஆதி மூலமானவன்.
- He is the triad who is the first and the last of all.
-
- முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்.
- The industrious will never be put to shame.
-
- முரட்டுப் பெண்ணும் சுருட்டுப் பாயும்.
- A stubborn wife, a mat rolled up.
-
- முருக்குப் பருத்து என்ன தூணாகப் போகிறதா?
- What if the murukku tree grow large, will it do for a pillar?
-
- முருங்கைக்காய் என்றால் பத்தியம் முறியுமா?
- Will the mention of the murungai fruit affect a prescribed diet?
-
- முலைகொடுத்து வளர்த்தவள் மூதேவி, முன்றானை போட்டவள் சீதேவி.
- The one that nursed and brought up the child is Múdévi, the wife is Shridévi.
-
- முலைக் குத்துச் சவலைப் பிள்ளைக்குத் தெரியுமா?
- Is the pain in the breast of the nurse, known to the suckling?
-
- முழங்கையிற் பட்ட சுகம்போல.
- Like the pleasure experienced when the elbow is struck.
-
- முழுகி முப்பது நாளாச்சு, இறங்கி உப்பு அள்ளக்கூட இல்லை என்கிறான்.
- It is thirty days since he bathed, and he says that he is so clean that touching salt would defile him.
-
- முழுக் கட்டி பெயர்க்கிற பன்றிக்குக் கொழுக் கட்டி விட்டது போல.
- Like arming a hog in the snout with a ploughshare, that can tare up the ground without it.
-
- முழுச் சோம்பேறி முள்ளு உள்ள வேலி.
- A perfect sluggard is like a hedge of thorns.
-
- முழுப் பங்குக்காரனுக்கு முந்திரிப் பங்குக்காரன் மிண்டன்.
- He whose share is only one three hundred and twentieth part, is more persistent than he who has a whole one.
-
- முழுப் பூசணிக்காயைச் சோற்றிலே மறைக்கிறாப் போல.
- Like attempting to conceal a whole pumpkin in a plate of rice.
-
- முழு மணிப் பூணுக்குப் பூண் வேண்டுமோ?
- Does a gemmed ferrule require an ornamental rim?
-
- முளைத்த மயிர் மூன்று அதிலும் இரண்டு புழுவெட்டு.
- His beard consists of three hairs, of which two are rotten at the root.
-
- முளையில் கிள்ளாததை முற்றினால் கோடாரிகொண்டு வெட்ட வேண்டும்.
- That which was not nipped in the bud will have to be felled with an axe when matured.
-
- முள்ளாலே முள்ளை எடுக்க வேண்டும்.
- Thorns are extracted by thorns.
-
- முள்ளுக்குக் கூர்மையும் துளசிக்கு வாசனையும் இயற்கை.
- By nature the thorn is sharp, and the tulasi fragrant.
-
- முள்ளுக்கு முனை சீவி விடுவார்களா?
- Who sharpens the point of a thorn?
-
- முள்ளுமேல் சீலை போட்டால் மெள்ள மெள்ள வாங்கவேண்டும்.
- If a cloth be spread on a thorn bush, it must be taken off with great care.
-
- முறத்தடி பட்டாலும் முகத்தடி படலாகாது.
- Though one may endure being struck with a sieve, he cannot endure being brow-beaten.
-
- முற்பகல் செய்யிற் பிற்பகல் விளையும்.
- What is done in the forenoon will result in good or evil in the afternoon.
-
- முற்றும் நனைந்தவர்களுக்கு ஈரம் ஏது?
- Do those who are drenched complain of being wet?
-
- முனைமுகத்து நில்லேல்.
- Do not stand in the face of a battle.
-
- முன் அளந்த நாழி பின் அளங்கும்.
- The same measure that was used before, must be used afterwards.
-
- முன் ஒன்று ஓதிப் பின் ஒன்று ஆடேல்.
- Do not say one thing and do another.
-
- முன் கை நீண்டால் முழங்கை நீளும்.
- If the fore-arm be stretched, the elbow will be so also.
-
- முன் கோபம் பின் இரக்கம்.
- Anger first, and pity afterwards.
-
- முன் விட்டுப் பின் நின்று கழுத்து அறுக்கலாமா?
- Having given one the lead, will you follow and cut his throat?
-
- முன்னவனே முன் நின்றால் முடியாத பொருள் உளதோ?
- If the eternal be with you, will anything be impossible?
-
- முன்னேபோனால் கடிக்கிறது பின்னேபோனால் உதைக்கிறது.
- Biting before, and kicking behind.
-
- முன்னே பார் பின்னே பார் உன்னைப் பார் என்னைப் பார்.
- Look before, look behind, look at yourself, look at me.
-
- முன்னே போனால் சிசுவத்தி பின்னே போனால் பிரமத்தி.
- When you go before you are guilty of infanticide, when you follow you are guilty of brahmanicide.
-
- முன்னேரம் கப்பற்காரன் பின்னேரம் பிச்சைக்காரன்.
- In the forenoon a ship owner, in the afternoon a beggar.
-
- முன்னே வந்த காதைப்பார்க்கிலும் பின்னே வந்த கொம்பு பலம்.
- The horn that came after, is stronger than the ear that came before.