Tamil Proverbs/மூ
Appearance
மூ.
-
- மூக்கிவிக்குக் கண்ணாடி காட்டினது போல.
- Like showing a noseless man a mirror.
-
- மூக்கறையனுக்கு வாழ்க்கைப்பட்டால் முன்னும் போகவிடான் பின்னும் போகவிடான்.
- If a woman is married to one whose nose is rent, he will not allow her to go before or after him.
-
- மூக்கு அறுபட்ட கழுதை தூவானத்திற்கு அஞ்சாது.
- A crop-nosed ass does not fear driving rain.
-
- மூக்குப் புண்ணாளி அல்லவோ தாசரி ஆகவேண்டும்?
- A man with a sore nose ought to become a Vaishnava mendicant, ought he not?
-
- மூக்கு மயிர் பிடுங்கினதுபோல வருத்தம் வரும்.
- The pain will be felt as keenly as when the hair in the nose is plucked out.
-
- மூக்கு மயிர் பிடுங்கினால் ஆட் பாரம் குறையுமா?
- Will a person’s weight be diminished by pulling the hair out of his nose?
-
- மூக்கைப் பிடித்தால் சீவன் போகிறது.
- If the nostrils be closed, life will depart.
-
- மூக்கைப் பிடித்தால் வாய் ஆ வென்னத் தெரியாது.
- He knows not how to open his mouth when one closes his nostrils?
-
- மூங்கிற் பாயும் முறட்டுப் பெண்டாட்டியும்.
- A bamboo mat, and an obstinate wife.
-
- மூங்கில் இலைமேலை தூங்கு பனி நீரே.
- Thou art a dew drop depending from the leaf of a bamboo.
-
- மூடரோடு ஆடிய நட்புக் கடுவழியிற் கட்டை ஊடாடிய கால்.
- The friendship of fools is as the feet that have travelled by a jungle path covered with stumps of trees.
-
- மூடர் முன்பு மூர்க்கம் பேசாதே.
- Speak not harshly before fools.
-
- மூடர்கள் சேர்க்கையால் தப்பாமல் கெடுதி வரும்.
- The companionship of fools invariably leads to loss.
-
- மூடர் கூட்டு உறவு முழுதும் அபாயம்.
- Danger attends the friendship of fools.
-
- மூடனாய் இருக்கிற பிள்ளையினாலே எப்போதும் நஷ்டமே வரும்.
- One always sustains loss if he has a stupid child.
-
- மூடனுடைய பங்கு தரித்திரமும் இகழ்ச்சியும்.
- Adversity and disgrace form the lot of fools.
-
- மூடன் சண்டை மூட்டுப் பிரிக்கும், மோர்க்கடன் வீட்டைத் தொடும்.
- The quarreling of fools will break friendship, debt on account of buttermilk will affect one’s house.
-
- மூடின முத்து மூன்று லோகம் பெறும், மூடாத முத்து முக்காற் காசும் பெறாது.
- A pearl concealed is worth the three worlds, one that is uncovered wont fetch three quarters of a cash.
-
- மூட்டைக்காரனுக்கு முழங்காலிலே புத்தி.
- A porter’s sense is in his knees.
-
- மூத்தது மோழை இளையது காளை.
- The first-born is a hornless animal, the younger is a bull.
-
- மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்.
- The utterances of elderly persons are ambrosia.
-
- மூப்பிலும் தருமம் செய்தல் முயற்சிதான்.
- The charitably disposed exert themselves even in old age.
-
- மூப்பு ஏன் பிடிப்பது, மூதேவி வாசத்திற்கு அடையாளம்.
- Why does one grow old? it is a sign that he is under the influence of the goddess of misfortune.
-
- மூர்க்கனும் முதலையும் சரி.
- The stubborn and crocodiles are alike.
-
- மூர்க்கன் முகத்தில் மூதேவி குடி இருப்பாள்.
- The goddess of misfortune dwells in the face of the stubborn.
-
- மூர்க்கனைச் சேர்ந்தவன் வாழான், மூடனைச் சேர்ந்தவன் படியான்.
- He who associates with the angry will not prosper, and he who associates with fools will not learn.
-
- மூர்க்கம் உள்ள ராஜாவும் மூட மந்திரியும் அழிவார்கள்.
- A king that is easily provoked, and a prime minister wanting discretion, will come to ruin.
-
- மூர்க்கரோடு இணங்கேல்.
- Associate not with the angry.
-
- மூலிகை அறிந்தால் மூன்று உலகமும் ஆளலாம்.
- He who is acquainted with botany may govern the three worlds.
-
- மூன்றாம் கட்டு அவிழ்த்தால் தெரியும்.
- It will be clear if you loose the third knot.
-
- மூன்று முழமும் ஒரு சுற்று, முப்பது முழமும் ஒரு சுற்று.
- A cloth of thirty cubits is put on with as much ease as one of three cubits.
-
- மூன்று வீட்டுக்கு முக்காலி நான்கு வீட்டுக்கு நாற்காலி.
- A three legged seat to three houses, and four legged seat, to four houses.
-
- மூன்று பெயர் வழிக்குத் துணை, இரண்டு பெயர் பிணையல் மாடு, ஒருவன் போனால் பரதேசி.
- Three may help one another on the way, two are like a yoke of oxen, one is like a pilgrim.
-
- மூன்று பொருளையும் தேடு முதிர்வயதில் ஊன்றுகோல் ஆகும்.
- Secure the three things virtue, wealth and happiness, they will serve as a staff in old age.
-
- மூன்றே முக்கால் நாழிகைக்குள் முத்து மழை பெய்தது, வாரி எடுக்கும்முன்னே மண்மாரி பெய்தது.
- It rained pearls for three and three fourths of a náligai, but before they could be gathered it rained earth.