Tamil Proverbs/வி
Appearance
வி.
-
- விசும்பிற் றுளி வீழினல்லால் பசும்புற் றலை காண்பது அரிது.
- If the sky withholds rain, not a blade of grass can be seen.
-
- விசுவாசக் கொக்கு நடமாடிச் செத்ததாம்.
- It is said that a devout crane died from wandering about.
-
- விசுவாசம் இருந்தால் வேசியும் பிழைப்பாள், நிசம் இருந்தால் நீசனும் தழைப்பான்.
- If she be faithful, even a harlot will prosper; if he be honest, even the low born will flourish.
-
- விசுவாசப் பூனை கருவாட்டைத் தூக்கிக்கொண்டு போகிறதாம்.
- It is said that a devout cat carried away the dried fish.
-
- விஷத்தைக் குடிக்கப் பாலாமா?
- Will poison when drunk turn into milk?
-
- விஷத்தின் மேல் விஷம், விஷம் போக்கும்.
- Poison is the medicine of poison.
-
- விஷம் தின்றால் கொல்லும்.
- If poison be swallowed, it will kill.
-
- விஷம் குடித்தவன் மிளகுநீர் குடிக்க வேண்டும்.
- He who has swallowed poison must take pepper water.
-
- விஷம் குடித்தாலும் சாகார் விசுவாசிகள்.
- Though they may take poison, the faithful will not die.
-
- விஷம் பெரிதோ பாவம் பெரிதோ?
- Which is the more destructive, poison or sin?
-
- விஷம் தீர வைத்தியன் வேண்டும், பாவம் தீரத் தெய்வம் வேண்டும்.
- A physician is necessary to counteract poison, and God, to remove sin.
-
- விஷ்ணு பெரியவர் என்று ஸ்ரீரங்கத்தில் பார்க்கவேண்டும்.
- You must go to Srírangam to understand that Vishnu is great.
-
- விஷ்ணுவைப் பெரிது என்பார் ஸ்ரீரங்கத்தில், சிவனைப் பெரிது என்பார் அருணாசலத்தில்
- The inhabitants of Srírangam say that Vishnu is great, those of Arunasalam, say that Siva is great.
-
- விஷ்ணுவே சமஸ்தம் என்பார் சிலர், சிவனே பெரிது என்பார் சிலர்.
- Some profess that Vishnu is all in all, while others maintain that Siva is the greater of the two.
-
- விடாச்சுரத்துக்கு விஷ்ணுகரந்தை.
- Vishnukarantai-Sphœranthus Indicus-is a specific remedy for fever.
-
- விடாத மழை பெய்தால் படாத பாடு படவேண்டும்.
- Should it rain unceasingly, intolerable suffering would follow.
-
- விடாத மழையால் இல்லி ஒழுக்கு அடைபடும்.
- Unceasing rain stops leaks.
-
- விடிந்தால் தெரியும் மாப்பிள்ளை குருடும் பெண் குருடும்.
- It will be known at day-break whether the bridegroom or the bride is blind.
-
- விடிந்தும் பெண்ணுக்கு முட்டாக்கோ?
- Does the woman require a veil even after sunrise?
-
- விடிய விடியக் கதை கேட்டு இராமனுக்குச் சீதை என்ன வேண்டுமென்று கேட்டதுபோல.
- As one asked what relationship existed between Ráma and Sita, after listening to their history till day-break.
-
- விடியற்காலம் கலியாணம், பிடி அடா தாம்பூலம்.
- The marriage will take place at dawn, thou fellow, take betel.
-
- விடியா மூஞ்சிக்கு வேலை அகப்பட்டாலும் கூலி அகப்படாது.
- Though the unfortunate may find work, he will not get his hire.
-
- விடியுமட்டும் இறைத்தவனும் விடிந்தபின்பு சாலை உடைத்தவனும் சரி.
- He that draws water till day-break, and he that breaks his bucket at day-break, are on an equality.
-
- விடியுமட்டும் மழை பெய்தாலும் ஓட்டாங்கிளிஞ்சில் முளைக்காது.
- Though it may rain till day-break, a potsherd will not germinate.
-
- விட்டிற்பூச்சியைப்போல் பறந்து திரிகிறான்.
- He flits about like a grass-hopper.
-
- விட்டு விட்டுப் பெய்கிற மழையிலும் விடாமற் பெய்கிற தூவானம் நல்லது.
- Unceasing driving rain is preferable to intermitted showers.
-
- விட்டுதடா ஆசை விளாம் பழத்து ஓட்டோடே.
- The pleasure of the wood-apple ceases with the shell.
-
- விண் காட்டப் போனவன் கண் காட்ட வந்தானாம்.
- It is said that he who went to point out the heavens, returned to shew his eyes.
-
- விண்ணாணம் எங்கே, கின்னரம் எங்கே?
- What is become of your ostentation, and where is your guitar?
-
- விண்ணுமாலைக்குக் கலியாணம் விழுந்து கொட்டடா சாம்புவா.
- O, thou tomtom beater, Vinumal is to be married, fall down and beat your tomtom.
-
- விண்ணேறு தப்பினாலும் கண்ணேறு தப்பாது.
- One may escape a thunderbolt, but he cannot escape the effects of an evil eye.
-
- விண்தொடு கொடிமூடி மேருவும் வீறளி தென்திசைக் கிரியும்.
- Meru whose summit reaches to heaven, and the merit giving mountain on the south.
-
- விண் பொய்த்தால் மண் பொய்க்கும்.
- If the sky fail, the earth will fail.
-
- விண் வலிதோ மண் வலிதோ?
- Which is the more powerful heaven or earth?
-
- விதி போகிற வழியே மதி போகும்.
- The mind will follow destiny.
-
- விதி முடிந்தவனைப் பாம்பு கடிக்கும்.
- A viper will bite him whose prescribed term of life is at an end.
-
- விதியை மதியால் தடுக்கலாமா?
- Can destiny be averted by prescience?
-
- விஸ்தாரக்காரன் செத்தால் பிழைக்கான்
- A boaster if he die, cannot return to life.
-
- வித்து இல்லாச் சம்பிரதாயம் மேலும் இல்லைக் கீழும் இல்லை.
- Out of nothing, nothing comes, whether above or below.
-
- வித்துவானுக்கு எது பரதேசம்?
- What country is foreign to a man of learning?
-
- வித்துவான்களுக்கு எது பெரிது?
- What is difficult to the learned?
-
- வித்தைக் கள்ளி மாமியார் விறகு ஒடிக்கப் போனாளாம் கற்றாழை முள்வந்து கொத்தோடே தைத்ததாம்.
- The sapient old mother-in-law is said to have got foul of the thorny cactus, when she went to gather firewood.
-
- வித்தை அற்றவன் அழகு வாசனை இல்லா முருக்கம் பூப்போல.
- The beauty of the unlettered, is like the inodorous Muruku flower.
-
- வித்தை விரும்பு.
- Desire learning.
-
- வித்தைக் கள்ளி, விளையாட்டுக் கள்ளி, பாகற்காய் விற்ற பழங்கள்ளி.
- She is a hypocrite, and idle;—she is that old thief that sold págal fruit.
-
- வித்தையடி மாமி விக்குதடி பணிகாரம்.
- O thou pretending mother-in-law, cakes stick in my throat.
-
- வித்தையில் எளியது சூனியம், பன்னத்திலே எளியது நீற்றுப்பெட்டி.
- Of arts sorcery is the easiest, of textures the pastry boiling basket.
-
- வித்தை அடிக்கிற கோழிக்கு விலாவில் இருக்கிறதாம் பித்து.
- It is said that an hypercritical hen has its bile in its chest.
-
- வித்தையுள்ளவன் பெரியவன்.
- He who is learned, is truly great.
-
- விநாசகாலே விபரீத புத்தி.
- Bent on destruction by a strange fatality.
-
- வியாச்சியம் சேற்றில் நட்ட கம்பம்.
- Litigation is a pole planted in mud.
-
- வியாதிக்கு மருந்து உண்டு விதிக்கு மருந்து உண்டா?
- Medicine may be had for a disease—is there any for destiny?
-
- வியாதியிலும் மருந்து கொடிது.
- The medicine is worse than the disease.
-
- விரதத்திலும் பெரிதோ ஒரு சந்தி?
- Is fasting more meritorious than penance?
-
- விரதம் கெட்டாலும் சுகம் தக்கவேண்டும்.
- Though the penance may prove ineffectual, one must have regard to his comfort.
-
- விரலுக்குத் தக்க வீக்கம்.
- The swelling will be proportioned to the size of the finger.
-
- விரல் உதவி விருந்தினர் உதவார்.
- Guests are not as serviceable, as are one’s fingers.
-
- விரல் உரல் ஆனால் உரல் என்ன ஆகும்?
- If the finger swell to the size of a rice mortar, how large will the mortar be when that swells?
-
- விரல் போகாத இடத்தில் உரல் போமா?
- Can a mortar pass through an opening which is not large enough to admit a finger?
-
- விரிந்த உலகில் தெரிந்தவர் சிலர்.
- There are few on the face of the wide world who are wise.
-
- விருது கூறி வந்து செடியில் நுழையலாமா?
- Anxious for fame, may one crawl under bushes?
-
- விருதுக்கோ வேட்டை ஆடுகிறது?
- What, hunting, to acquire fame?
-
- விருத்தாசலம் போனால் திரட்பாவம் போகும்.
- Pilgrimage to Viruttáchalam will expiate great sins.
-
- விருந்து இட்டுப் பகை தேடுகிறது.
- Seeking enemies by means of hospitality.
-
- விருந்திலோர்க்கு இல்லைப் பொருந்திய ஒழுக்கம்
- The inhospitable are destitute of agreeable manners.
-
- விருந்து இல்லாச் சோறு மருந்து.
- Food without hospitality is medicine.
-
- விருந்தைப் பண்ணிப் பொருந்தப் பண்ணு.
- Win your enemy by hospitality.
-
- விருந்தும் மருந்தும் மூன்று பொழுது.
- Hospitality and medicine must be confined to three days.
-
- விருப்பத்தினால் ஆகாதது வீம்பினால் ஆகுமா?
- Can that which is unattainable by ambition, be attained by mere boasting?
-
- விரை ஒன்று போடச் சுரை ஒன்று முளைக்குமா?
- Will the bottle gourd spring up when a different seed is sown?
-
- விலக்கக் கூடாத துன்பத்திற்கு விசனப்படாதே.
- Do not fret about disagreeables that cannot be averted.
-
- விலங்கை விட்டுத் தொழுவில் மாட்டிக்கொண்டதுபோல.
- Like being put in the stocks after liberation from chains.
-
- விலை மகட்கு அழகு தன் மேனி மினுக்குதல்.
- It befits a harlot to make her person shine.
-
- வில் அடியால் சாகாதது கல் அடியால் சாகுமா?
- Will that which resisted the stroke of a bow, die by the pelting of stones?
-
- வில் இல்லாதவன் அம்பு தேடுவான் ஏன்?
- Why should a man without a bow seek arrows?
-
- வில்லம்போ சொல்லம்போ?
- Is it an arrow or sarcasm?
-
- வில்லுக் குனியாது எய்தால், விலகாது எதிர்த்த பகை.
- If you shoot an arrow when the bow is not sufficiently bent, the enemy will not retreat.
-
- வில்லுக்கு விஜயன் பரிக்கு நகுலன்.
- In archery Vijaya, in horsemanship Nakula.
-
- வில் வளைந்தால் மோசம் தரும்.
- The bending of a bow is dangerous.
-
- வில்வப்பழம் தின்பார் பித்தம் போக, பனம்பழம் தின்பார் பசி போக.
- They eat vilvam fruit to remove biliousness, and palmyrah fruit to appease hunger.
-
- விவேகத்தின் மேன்மை அவிவேகத்தை ஒழித்தல்.
- It is the excellence of discretion to avoid indiscretion.
-
- விழலுக்கு இறைத்த நீர்.
- Water drawn for coarse grass.
-
- விழித்தவன் கன்று நாகுகன்று தூங்கினவன் கன்று கடாக்கன்று.
- The calf of the man who watched is a female; that of him who slept is a male.
-
- விழுகிற சுவரிலே கை வைப்பான் ஏன்?
- Why put your hand on a tottering wall?
-
- விழுங்கின ரசம் வயிற்றில் இராது.
- Swallowed mercury will not remain in the stomach.
-
- விழுந்த பிள்ளையை எடுக்க நேரம் இல்லை.
- No time to lift up the child that has fallen down.
-
- விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்கிறான்.
- Though he has fallen down, he says that his mustache is not soiled with dust.
-
- விளக்குமாற்றுக்குப் பட்டுக் குஞ்சமா?
- What, a silk tassel for a broom?
-
- விளக்கெண்ணெய்க்குக் கேடே தவிரப் பிள்ளை பிழைப்பது இல்லை.
- The child did not survive,—it was only waste of oil.
-
- விளக்கெண்ணெயைத் தடவிக்கொண்டு ஆற்று மணலில் புரண்டாலும் ஒட்டுகிறதுதான் ஒட்டும்.
- Though one roll himself in sand, after applying oil to his body, he cannot make a larger quantity of sand adhere to his body.
-
- விளக்கெண்ணெயாம் தலைக்கு எண்ணெய்.
- It is said that what he uses for the head is lamp-oil.
-
- விளக்கைப் பிடித்துக்கொண்டு கிணற்றில் விழுகிறதா?
- What, falling into a well with a lighted lamp in the hand?
-
- விளக்கைக் கொளுத்திக் கீழே வைப்பார் உண்டோ?
- Does any one place a lighted lamp on the floor?
-
- விளக்கை வைத்துக்கொண்டு நெருப்புக்கு அலைகிறதுபோல.
- Like wandering abroad for fire, while there is a lighted lamp in the house.
-
- விளக்கு ஒளிக்கு ஆசைப்பட்ட விட்டில்போல.
- Like a grass-hopper fascinated by a lighted lamp.
-
- விளங்கா மடையன் விறகுக்குப் போனால் விறகு கிடைத்தாலும் கொடி கிடையாது.
- If a simpleton go for firewood, though it be found, a creeper to bind it into a bundle will not be found.
-
- விளையாட்டுப் பிள்ளை விஷத்துக்கு அஞ்சாது.
- A playful child will not fear venomous reptiles.
-
- விளையாட்டாய் இருந்தது வினையாய் முடிந்தது.
- Originating in playfulness it ended seriously.
-
- விளையாட்டுப் பண்டம் வீடு வந்து சேராது.
- Things prepared by playful children never come home.
-
- விளையும் பயிர் முளையிலே தெரியும்.
- The future crop is known in the germ.
-
- விறகு கட்டுக்காரனுக்கு நாரை வலம் ஆனால் ஒரு பணம் விற்கிறது ஒன்றேகாற்பணம் விற்கும்.
- If a crane cross a firewood man from left to right, what he sells ordinarily for a fanam, will fetch a fanam and a quarter.
- If a crow fly on the right of one going out of his house, he is sure to meet with success. If on the left, he will not obtain what he seeks.
-
- விறகு கோணலானாலும் நெருப்புப் பற்றாதா?
- Will firewood not ignite, because crooked?
-
- விற்ற குண்டைக்குப் புல் போடுவான் ஏன் ?
- Why feed a bullock after it is sold?
-
- வினைக்காலம் வரும் காலம், மனை வழியும் தெரியாது.
- When times are inauspicious, one does not know his way home.
-
- வினை விதைத்தவன் வினை அறுப்பான் தினை விதைத்தவன் தினை அறுப்பான்.
- He who sows actions will reap actions, he that sows millet will reap millet.