Jump to content

Tamil Proverbs/வீ

From Wikisource
Tamil Proverbs
translated by Peter Percival
வீ
3802964Tamil Proverbs — வீPeter Percival

வீ.

  1. வீக்கமோ தூக்கமோ?
    Is it the effect of swelling or of sleep?

  2. வீக்கம் கண்டால் தூக்கமாம்.
    Swelling is followed by languor.

  3. வீங்கலுக்கு விஷம் அதிகம்.
    Looking at the swelling, the inflammation is excessive.

  4. வீசம் இறுத்த குடி நாசம்.
    The payment of a sixteenth is a loss to a family.

  5. வீசி நடந்தால் வெள்ளி வீசும் குறையும்.
    Silver ornaments are injured by swinging the arms when walking.

  6. வீச்சு என்றாலும் விடுவேனா, வீர புத்திர அம்பலகாரா?
    Thou son of the violent Ambalakáran, shall I let thee go because thou squeakest?

  7. வீடு அசையாமல் தின்னும் யானை அசைந்து தின்னும்.
    A house consumes standing still, an elephant when moving.

  8. வீடு எல்லாம் குருடு, வாசல் எல்லாம் கிணறு.
    The inmates of the house are all blind, and there are wells all over the yard.

  9. வீடு கட்டுகிறது அரிது, வீடு அழிக்கிறது எளிது.
    To build a house is difficult, to destroy one is easy.

  10. வீடு கட்டுமுன்னம் கிணறு வெட்டவேண்டும்.
    Before building a house dig a well.
    In a Sanscrit work on architecture I saw some years ago, the advice here expressed is given as the first thing to be attended to, when selecting a site for a house.

  11. வீடு தருவோன் மேலும் தருவோன்.
    He who gives a house may give more than that.

  12. வீடு நிறைந்த விளக்குமாறு.
    A house full of brooms.

  13. வீடு போ என்கிறது, காடு வா என்கிறது.
    The homestead says go, the place of cremation says come.

  14. வீடு வெறு வீடு வேலூர் அதிகாரம்.
    His house is empty, but he acts as if he were the chief of Vellore.
    One of the Nabob’s palaces was at Vellore.

  15. வீடு வெறுவீடாய் இருந்தாலும் மணியம் ஏழு ஊர்.
    Although his house is empty, he is the manager of seven villages.

  16. வீட்டில் அழகு வேம்பு அடியாகும்.
    The shade of a margosa tree is good for a house.

  17. வீட்டில் அடங்காதவன் ஊரில் அடங்குவான்.
    He who is not obedient in the house will obey in the village.

  18. வீட்டுக்கருமம் நாட்டுக்கு உரையேல்.
    Do not make known abroad the affairs of the homestead.

  19. வீட்டுக்கு இருந்தால் வெண்கலப் பெண்டாட்டி, வீட்டுக்கு இல்லாமற் போனால் தூங்கற் பெண்டாட்டி.
    If in the house she is bell-metal wife, if she goes abroad, she is a slumbering wife.

  20. வீட்டுக்கு அலங்காரம் பெரிய குடி.
    A large family gives beauty to a house.

  21. வீட்டுக்குச் சோற்றுக்கு இல்லை சிவன் அறிவான், நாட்டுக்கு செல்வப்பிள்ளை நான் அல்லவோ?
    Siva knows that I have no rice at home, yet am I not regarded abroad as a wealthy person?

  22. வீட்டுக்கு அலங்காரம் விளக்கு.
    A lighted lamp gives beauty to a house.

  23. வீட்டுக்கு வீடு மண் அடுப்புத்தான்.
    An earthen hearth is the rule in all houses.

  24. வீட்டுக்கு அலங்காரம் மனையாள்.
    A wife gives beauty to a house.

  25. வீட்டுக்கு அலங்காரம் வேளாண்மை.
    Grain gives beauty to a house.

  26. வீட்டுச் செல்வம் மாடு, தோட்டச் செல்வம் முருங்கைக்காய்.
    A cow is house-wealth, and murungai fruit is garden-wealth.

  27. வீட்டுச் சோற்றைத் தின்று வீண் சண்டைக்குப் போவானேன்?
    Why go and quarrel causelessly when eating your own rice?

  28. வீட்டுச் சோற்றைப் போட்டு வீண் பேச்சுக் கேட்பானேன்?
    Having given his own rice why should one hear abuse?

  29. வீட்டுப் பாம்பு காட்டுக்குப் போனால் அதுவும் காட்டுப் பாம்பு ஆகும்.
    If a tamed snake go to the jungle, it will become a wild one.

  30. வீட்டு வேலை வெளி வேலை பார்த்துக் காட்டு வேலைக்குக் கட்டோடே போகலாம்.
    After finishing house work and out door work, one should go to that of the jungle with due preparation.

  31. வீட்டுப் பிள்ளையும் வெளிப் பிள்ளையும் வித்தியாசம் அறியாது.
    Children in one’s own, house and strange children make no difference.

  32. வீட்டு மூதேவியும் காட்டு மூதேவியும் கூடி உலாவுகிறது.
    The house-goddess of misfortune, and one of the wilds are walking together.

  33. வீட்டுக்குப் புகழ்ச்சியோ நாட்டுக்குப் புகழ்ச்சியோ?
    Is it fame to a family or to the country?

  34. வீட்டுக்காரியம் பாராதவன் நாட்டுக் காரியம் பார்ப்பானா?
    Will he who cannot manage his own household affairs, attend to the management of a country?

  35. வீட்டுக்காரி என்று பெண்சாதிக்குப் பெயர்.
    Another name for a wife is the mistress of the house.

  36. வீட்டுக்கு வீரன் காட்டுக்குக் கள்ளன்.
    At home, a hero, abroad, a coward.

  37. வீட்டுக்கு வீடு எதிர் வீடு ஆகாது.
    The door-ways of opposite houses must not be over against each other.

  38. வீட்டுக்கு ஏற்றின விளக்கு விருந்துக்கும் ஆகும்.
    A lamp lit in a house for the inmates may answer for a feast.

  39. வீட்டுக்கு வாய்த்தது எருமை, மேட்டுக்கு வாய்த்தது போர்.
    A buffaloa makes a house prosper, a corn-stack makes high ground conspicuous.

  40. வீட்டுக்கு ஒரு வாசற்படி, பூட்டுக்கு ஒரு திறவுகோல்.
    One step as an entrance to the house, and one key to a lock.

  41. வீட்டுப் பெண்சாதி வேம்பும் காட்டுப் பெண்சாதி கரும்பும்.
    The wife is a margosa tree, the mistress sugar-cane.

  42. வீட்டைக் கட்டிக் குரங்கைக் குடி வைத்ததுபோல.
    Like building a house, and allowing a monkey to dwell therein.

  43. வீட்டைக் காத்து அருள், பாட்டைப் பார்த்து அருள்.
    Watch your house, and manage your affairs.

  44. வீட்டைக் கட்டிப் பார், கலியாணம் செய்து பார்.
    Enjoy the convenience of a house after building it, and the happiness of the conjugal state, after marrying a wife.

  45. வீட்டைப் பிடுங்கி விறகாய் எரித்தாலும் வீணாதிவீணனுக்கு ஐந்து பணம் எப்படி வரும்?
    Although he may pull down his house and use it for firewood, a notorious idler can never get five fanams?

  46. வீட்டைக் காத்த நாயும், காட்டைக் காத்த நரியும், வீண் போகாது.
    The expectations of a dog in a house, and a fox in the jungle are not vain.

  47. வீட்டைக் கட்டி ஓட்டைப் போடு.
    Build the house, and then tile it.

  48. வீட்டைக் கட்டு, அல்லது காட்டை அழி.
    Either build the house, or destroy the jungle.

  49. வீட்டை ஏன் இடித்தாய் மூட்டைப்பூச்சிக்குப் பயந்து?
    Why pull down the house, for fear of bugs?

  50. வீட்டை எல்லாம் வெல்லத்திற்கு மாறினான்.
    He gave the whole house in exchange for sugar.

  51. வீணருக்குச் செய்தது எல்லாம் வீணாம், கடற்கரையில் காணும் மணல்மேல் எழுத்துக்காண்.
    Favours shewn to the worthless are vain, they are like writing on the sand of the sea-shore.

  52. வீணாய் உடைந்த சட்டி வேண்டியது உண்டு என் தலையிற் பூணாரம் பூண்ட புதுமைதனைக் கண்டது இல்லை.
    There are plenty of pans uselessly broken, I have scarcely ever seen my head adorned with jewels.

  53. வீணுக்கு உழைக்கிறவன் வீணன்.
    He who labours for no purpose is a fool.

  54. வீண் இழவுக்கு மார் அடிக்கிறதா?
    Am I to smite my breast on account of the death of a stranger?

  55. வீண் இழவுக்கு வீட்டைக் கட்டிப் பார இழவிற்குப் பந்தல் போடு.
    Build a house for the use of a stranger, and put up a pandal for the same purpose.

  56. வீண் விபரீதத்தால் பேதையர் வீண் செலவு செய்ய உடன்படுவார்கள்.
    Fools are extravagant through mere perverseness.

  57. வீம்புக் குப்பையில் விளையும் வீண் செடி.
    A useless shrub growing on a rubbish-heap of ostentation.

  58. வீம்புக்கு வேடம் கொள்ளாதே.
    Do not assume a garb for mere show.

  59. வீம்பு பேசுகிறவன் அழிவான், வீரியம் பேசுகிறவன் விழுவான்.
    A boaster will be ruined, he who talks as a hero will fall.

  60. வீரம் பேசிக்கொண்டு எழுந்த சேவகன் வெட்டும் களம் கண்டு முதுகிடலாமா?
    May a soldier who defiantly rose to the combat, retreat in sight of the battle field?

  61. வீரன் கேண்மை கூர் அம்பாகும்.
    The friendship of a hero, is a sharp arrow.

  62. வீரியம் பெரிதோ காரியம் பெரிதோ?
    Which is the greater boasting or acting?