Jump to content

Tamil Proverbs/வெ

From Wikisource
Tamil Proverbs
translated by Peter Percival
வெ
3805039Tamil Proverbs — வெPeter Percival

வெ.

  1. வெங்கண்ணை வாங்கு உன் கண்ணைக் கொடுத்து.
    Give your eyes in exchange for white-eyed fish.

  2. வெகுஜன வாக்கியம் கர்த்தவ்வியம்
    The sayings of the many involve duty.

  3. வெச்செனவுக்கு அன்றி வெண்ணெய் உருகுமா?
    Can butter be melted without heat?

  4. வெட்கம் கெட்டாலும் கெடட்டும், தொப்பையில் இட்டால் போதும்.
    It matters little if his honour is at stake, it is enough if his paunch be filled.

  5. வெட்கத்தால் ஒல்காதவள் குலஸ்திரிக்குப் போகாது.
    She who is not restrained by modesty, is not a woman of superior birth.

  6. வெட்கம் அற்ற பெண்பிள்ளை வீண்.
    A woman without shame is worthless.

  7. வெட்கப்படுகிற வேசியும் வெட்கம் கெட்ட சமுசாரியும் உதவாதவர்கள்
    Shame in a prostitute, and want of modesty in a wife, are equally out of place.

  8. வெட்கமே கெட்டு வெளிப்பட்ட முண்டைக்கு முக்காடு ஏது?
    What signifies a veil to a widow who goes about without shame?

  9. வெட்கத்துக்கு அஞ்சினவன் சச்சரவு செய்வானா?
    Will he who is afraid of disgrace quarrel?

  10. வெட்கத்துக்கு அஞ்சினவன் கடனுக்கு அஞ்சுவான்.
    He that is afraid of disgrace is afraid of running into debt.

  11. வெட்கத்தை விற்றுக் கக்கத்திலே கொண்டுபோகிறான்.
    Having sold his sense of shame, he carries its price under his arm.

  12. வெட்கம் கெட்டவனுக்கு மேனி எல்லாம் அழுக்குத்தான்.
    The whole body of the shameless, is dirty.

  13. வெட்டப் பலம் இல்லை வெட்டிக்குப் போக மனம் இல்லை.
    He is too weak to cut, and unwilling to go out.

  14. வெட்ட வெளியிலே வையாளி விடுகிறதா?
    Would you let loose a frisky calf in an open plain?

  15. வெட்டிக்கு இறைத்து விழலுக்குத் தண்ணீர் கட்டினதுபோல,
    Like irrigating for no purpose.

  16. வெட்டிக் கொண்டுவா என்றாற் குத்திக் கொண்டுவருகிறான்.
    When he is told to reap and bring, he pounds and brings.

  17. வெட்டிவேரில் விசிறியும், விலாமிச்சை வேரில் தட்டியும் பண்ணு.
    Make a fan of the cuscus root, and a tat of sweet scented grass root.

  18. வெட்டின இடத்தில் சலம் ஊறும், வீடு கட்டின இடத்தில் நடை ஏறும்.
    Where the ground is dug water will spring, where a house is built there will be an entrance.

  19. வெட்டி எல்லாம் தண்ணீர், மண் கட்டி எல்லாம் புல் நாற்று
    There is water all over the path, young grass all over the sod.

  20. வெட்டிவெட்டிப் பார்த்தாலும் முட்டக் கரிக்காசுதான் அகப்படும்.
    Though you may examine by continued digging, you will get only coin of coal in abundance.

  21. வெட்டிக்குப் பெற்று வேலியில் எறிந்தார்களா?
    Did they give birth to me in vain, and throw me at a hedge?

  22. வெட்டியானும் பிணமும் கட்டிக்கொண்டு அழட்டும்.
    Let the Vettiyan and the corpse embrace each other, and weep.

  23. வெட்டின குளத்திலும் தண்ணீர் குடியாது கட்டின வேலியும் தாண்டமாட்டாது.
    It neither drinks in an artificial reservoir, nor leaps an artificial hedge.

  24. வெட்டினவனுக்கு ஒரு கேணி வீணாதி வீணனுக்குப் பல கேணி.
    He that has sunk a public well has only one, a notorious idler has many.

  25. வெட்டு ஒன்று கண்டம் இரண்டு.
    One cut, two slices.

  26. வெட்டென உரையே துட்டர்கள் அறைவர்.
    The wicked speak harshly.

  27. வெட்டெனப் பேசேல்.
    Do not speak harshly.

  28. வெண்கலக் கடையில் யானை புகுந்ததுபோல.
    As an elephant entered a brass vessel bazaar.

  29. வெண்டலைக் கருடன் வந்திடுமானால் எவர் கைப்பொருளும் தன் பொருள் ஆகும்.
    When a brahmany kite crosses one from right to left, he may become possessed of the wealth of all.

  30. வெண்ணெய்யை வைத்துக்கொண்டு நெய்க்கு அழலாமா?
    Having butter, would you weep for ghee?

  31. வெண்ணெய் திரளுகிறபோது தாழி உடைந்தாற்போல.
    As the churn broke just as the batter was forming.

  32. வெண்ணெய் உருக்குகிறதற்குள்ளே பெண்ணை ஆற்றிலே தண்ணீர் வருகிறது.
    Ere butter can melt, freshes appear in the Pennar.

  33. வெந்த சோற்றைத் தின்று வந்தது எல்லாம் பிதற்றுகிறான்.
    He eats his rice, and talks at random.

  34. வெந்த சோற்றைத் தின்று விதி வந்தால் சாகிறது
    Hating one’s rice, and dying when the time comes.

  35. வெந்ததுபோதும் முன்றானையிலே கொட்டு.
    It is boiled enough, put it into the end of my cloth.

  36. வெந்ததைப் போடு முன்றானையிலே
    Put what is boiled into my cloth.

  37. வெந்த புண் வினை செய்யாது.
    No evil consequences can arise from a burn.

  38. வெந்தயம் இட்ட கறிக்கு சந்தேகம் இல்லை.
    A curry with vendayam in it needs not be questioned.

  39. வெந்தயம் போடாத கறியும் கறி அல்ல, சந்தை இல்லாத ஊரும் ஊர் அல்ல.
    A curry made without vendayam-Trigonella Fœnum Grœcum-is not a curry, a village without a market is not a village.

  40. வெந்தால் தெரியும் வெங்காயம் மணப்பு.
    The flavour of an onion will be known after it is boiled.

  41. வெந்நீரிலே வீடு வேகுமா?
    Can a house be burnt down with hot water?

  42. வெய்யிலிலே போட்டாலும் உலரான், தண்ணீரிலே போட்டாலும் நனையான்.
    He will not dry in the sunshine, nor dissolve in water.

  43. வெய்யோன் வெயில் முன் எரி தீபம்போல.
    Like a burning lamp in sunshine.

  44. வெல்லப் படை இல்லை, தின்னப் படை உண்டு.
    No army to conquer, though there are enough to consume.

  45. வெல்லப் பானையை எறும்பு மொய்த்ததுபோல,
    As the ants swarmed on a pot of sugar.

  46. வெல்லப் பானையை ஈக்கள் மொய்த்துக்கொண்டதுபோல.
    As the flies swarmed on a pot of sugar.

  47. வெல்லம் சாப்பிடுகிறவன் ஒருவன் விரலைச் சூப்புகிறவன் ஒருவன்.
    One eats the sugar, another licks his fingers.

  48. வெல்லப் போனான் ஒரு செல்லப்பிள்ளை மெல்லப் போனாள் ஒரு அமுங்குத் தலையன்.
    A pet child went to conquer, a flat-headed fellow followed him slowly.

  49. வெல்லாது உங்கள் படை செல்லாது பாண்டியன்முன்.
    Your army will not conquer, nor even oppose Pandya.

  50. வெளிச்சம் இருள் ஆனால் இருள் என்னவாம், மெய்ஞ்ஞானி துர்மார்க்கனானால் அஞ்ஞானி எப்படி ஆவான்?
    If light become darkness, what will the darkness be; if a wise man becomes wicked, what a great fool he will be?

  51. வெளிச்சீர் உட்சீரைக் காட்டும் கண்ணாடி
    The exterior is the mirror of the interior.

  52. வெளுத்தது எல்லாம் பால் கறுத்தது எல்லாம் தண்ணீர்
    Every thing white is milk, and every thing black is water.

  53. வெளுத்து விட்டாலும் சரி சும்மா விட்டாலும் சரி.
    It will be all the same whether he is punished or let go.

  54. வெள்ளம் பள்ளத்தை நாடும் விதி புத்தியை நாடும்.
    The flood inclines to a hollow, fate follows the intention.

  55. வெள்ளம் வருவதற்குமுன் அணை கோலிக் கொள்ளவேண்டும்.
    One should raise the dam before the flood comes.

  56. வெள்ளரிக்காய் விற்ற பட்டணம்.
    The city where cucumbers were sold.

  57. வெள்ளாடு நனைகிறது என்று வேங்கைப்புலி விழுந்து விழுந்து அழுகிறதாம்.
    It is said that the tiger is fallen down and crying for grief because the goat was wet.

  58. வெள்ளாடு குழை தின்றதுபோல.
    As the goat crops leaves.

  59. வெள்ளாட்டிக்குச் சன்னதம் வந்தால் விழுந்து விழுந்து கும்பிட வேண்டும்.
    If a servant girl, be possessed of a devil, all must fall down before her.

  60. வெள்ளாட்டி பெற்ற பிள்ளை விடியற்காலம் செத்துப் போயிற்று
    The child brought forth by a servant girl, died at sunrise.

  61. வெள்ளாட்டியும் பெண்டாட்டியும் சரியா?
    Are a maid servant and a wife, on an equality?

  62. வெள்ளாளன் மரபே மரபு கள்ளர் திருட்டே திருட்டு.
    Of all ranks that of the Vellala is foremost, of thefts that of the Kallar is notorious.

  63. வெள்ளாளன் கெடுக்காவிட்டாலும் வெள்ளோலை கெடுக்கும்.
    If the Vellala did not procure your ruin, his white olas will destroy you.

  64. வெள்ளாளன் மினுக்குப்பண்ணிக் கெட்டான், வேசி சளுக்கும் பண்ணிக் கெட்டாள்.
    The Vellala was ruined by adornment, the harlot by finery.

  65. வெள்ளாளன் கிரந்தமும் பார்ப்பான் தமிழும் விழல் விழலே.
    The Sanscrit of a Vellala, and the Tamil of a brahman, are equally faulty.

  66. வெள்ளாளர் செய்யாத வேளாண்மை வேளாண்மை அல்ல.
    Agriculture not performed by Vellalas, is no agriculture.

  67. வெள்ளாளர் குடிக்கு ஒரு கள்ளாளர் குடி.
    A Kallála family in a Vellála house.

  68. வெள்ளிக்கு எதிரே போனாலும், வெள்ளாளனுக்கு எதிரே போகலாகாது.
    One may go before an evil star, but not before a Vellalan.

  69. வெள்ளிக்குப் போட்டதும் கொள்ளிக்குப் போட்டதும் சரி.
    Money laid out on silver ornaments, and that spent for firewood are equally a loss.

  70. வெள்ளி போட்ட காலுக்கு வெறுங்கால் அடிமையா?
    Is a naked foot, the slave of a foot wearing silver ornaments?

  71. வெள்ளி வட்டிலும் வேண்டும் விளிம்பிலே பொன்னும் வேண்டும்.
    I must have a silver platter with a rim of gold.

  72. வெள்ளெருக்குக்கும் வெள்ளாட்டுப் பாலுக்கும் கள்ளக் கருமேகம் காணாமற் போம்.
    The disease which blackens the skin, will be thoroughly cured by the white species of erukku and goats milk.

  73. வெள்ளை கொடுக்க வினை தீரும்.
    One’s sins will be expiated by giving cloth to the destitute.

  74. வெள்ளைக்குக் கள்ளம் இல்லை.
    White is faultless.

  75. வெள்ளைக்கு இல்லை கள்ளச் சிந்தை.
    The out-spoken are free from deceit.

  76. வெறுங்கைத் தட்டான் இரும்பு ஊதிச் செத்தான்.
    A money-less goldsmith died by blowing iron.

  77. வெறிகாரன் குடியை விடான் வீண் புத்திக்காரன் பாவத்துக்கு அஞ்சான்.
    A drunkard will not forsake drinking, a fool is not afraid of evil deeds.

  78. வெறிகொண்ட யானை மிதந்து திரிகிறாப்போலே.
    As an elephant in rut wanders about unrestrained.

  79. வெறிக்கிட்டு அழியேல்.
    Squander not by drinking.

  80. வெறு நாய் சந்தைக்குப் போனால் வெள்ளிக்கோலால் அடிபட்டு வரும்.
    A dog which goes alone to the market, will be beaten with the steelyard.

  81. வெறும் கை முழம் போடுமா?
    Can the arm measure a cubit, when there is nothing to be measured?

  82. வெறும் சட்டி தாளிக்கிறான்.
    He flavours an empty chatty.

  83. வெறும் புளி தின்றால் பற் கூசும்.
    Tamarinds if eaten alone, will set the teeth on edge.

  84. வெறும் பானையில் ஈ புகுந்ததுபோல.
    As flies entered an empty pot.

  85. வெறும் பயலுக்கு ஏற்ற வீறாப்பு.
    Arrogance suited to one’s worthlessness.

  86. வெறும்பிலுக்கு வண்ணான் மாற்று.
    Finery borrowed from a washerman.

  87. வெறுவாய்க்கு இலைகெட்டவன் விறகுக்குப் போனால் விறகு கிடைத்தாற் கொடி கிடையாது கொடி கிடைத்தால் விறகு கிடையாது.
    If a worthless fool go out to gather firewood, he cannot procure a creeper, when he gets a creeper, he can find no firewood.

  88. வெறுவாய் மெல்லுகிற அம்மையாருக்கு நாழி அவல் அகப்படடதுபோல.
    As a measure of bruised dried rice given to an old dame, who had nothing to chew but an empty mouth.

  89. வெறு வாயைத் தின்றவனுக்கு வெள்ளை அவல் கிடைத்ததுபோல
    As one who had nothing to eat but an empty mouth obtained bruised rice.

  90. வெற்றி பெற்றவன் சுத்த வீரன்.
    He who has conquered is a perfect hero.

  91. வெற்றிலைக்குத் தண்ணீரும் வேசைக்கு மஞ்சளும்போல.
    Like water to the betel creeper, and saffron to a prostitute.

  92. வெற்றிலை போல் இருக்கும் மிகுந்த மரம் ஆகி விடும் புத்தி உள்ள பூமரத்துக்குப் பூவிரண்டு வக்கணையாம்.
    Its leaf is like betel leaf, it grows to a large tree, this intelligent tree has two flowers.