Jump to content

Tamil Proverbs/வே

From Wikisource
Tamil Proverbs
translated by Peter Percival
வே
3805126Tamil Proverbs — வேPeter Percival

வே.

  1. வேகத்தில் நாலுவிதம் உண்டு.
    Of speed there are four kinds.

  2. வேகப் பொறுத்தது ஆறப் பொறுக்கக் கூடாதா?
    Having been patient till the food was boiled, can you not wait till it cools?

  3. வேகாத வீட்டில் வேகும் கட்டை காமம்.
    Lust is a burning block of wood in a house, not on fire.

  4. வேகாத சோற்றுக்கு விருந்தாளிகள் இரண்டு பெயர்.
    There are two guests for the insufficiently boiled rice.

  5. வேகிற வீட்டில் பிடுங்கிறது லாபம்.
    Whatever is snatched from a burning house is an advantage.

  6. வேகிற வீட்டுக்கு வெட்டுகிற கிணறு.
    To dig a well to put out a house on fire.

  7. வேகிற வீட்டிற்குக் கணக்குப் பார்ப்போர் உண்டோ?
    Are there any who waste time in casting up the cost of a house when it is on fire?

  8. வேகிற வீட்டை அவிக்காமல் இருப்போர் உண்டோ?
    Will not men extinguish the fire, when a house is on a blaze?

  9. வேசி உறவு காசிலும் பணத்திலுந்தான்.
    The friendship of a prostitute is in the money she gets.

  10. வேசி காசு பறிப்பாள்.
    A prostitute knows how to deprive one of his money.

  11. வேசியரும் நாயும் விதிநூல் வைத்தியரும் பாசம் அற்று நிற்பது கண்பார்.
    See how harlots, dogs, and physicians, are at variance.

  12. வேடக்காரனுக்கும் ஆடக்காரனுக்கும் பகை, வேசிக்கும் தாசிக்கும் பகை.
    Enmity exists among dancing masters and among harlots.

  13. வேடக்காரா வேடம் விடடா, ஓடக்காரா ஓடம் விடடா.
    Thou hypocrite, quit thine hypocrisy, thou boatman, steer the boat.

  14. வேடத்தில் நாலு விதம் உண்டு.
    Of disguises there are four kinds.

  15. வேடத்தினால் என்ன, வெண்ணீற்றினால் என்ன?
    What avail special forms, what avails white ashes?

  16. வேடமோ தவவேடம் மனதிலோ அவவேடம்.
    In appearance an ascetic, at heart a cheat.

  17. வேடம் மூன்று வகை.
    There are three forms of disguise.

  18. வேடம் அழிந்துபோம்.
    Disguises will perish.

  19. வேடம் கூடமும் கொள்ளாது.
    His pretence is such that a room cannot contain it.

  20. வேடருக்கு அருமையான வேட்டை முசல் வேட்டை.
    Foresters’ favourite sport is bare hunting.

  21. வேடருக்கு தேன் பஞ்சமா, மூடருக்கு அடி பஞ்சமா?
    Is honey rare among foresters, or chastisement to fools?

  22. வேடர் இல்லா ஊரில் யாவும் குடி இருக்கும்.
    In a village where there are no hunters, all kinds of beasts may be found.

  23. வேடர்களில் மலைவேடர் விசேஷம்.
    Of hunters those that inhabit hill tracts, are the moat distinguished.

  24. வேடர் கையில் அகப்பட்ட தேன் கூண்டுபோல்.
    As a bee-hive in the hands a forester.

  25. வேட்டை ஆடிச் சிங்கம் தின்னும்.
    The lion lives by hunting.

  26. வேட்டையில் பெரிய வேட்டை பன்றி வேட்டை
    Hog-hunting is the most exciting of sports.

  27. வேட்டையில் பிரியமான வேட்டை சிக்காரி வேட்டை.
    The most favourite of sports is that of the huntsman.

  28. வேண்டாத பெண்டாட்டியின் கைபட்டாற் குற்றம் கால் பட்டாற் குற்றம்.
    A wife not liked offends, whether she touches with the hand, or with the foot.

  29. வேண்டாத பேருக்கு ஈந்து என்ன, வேலையில் ஆற்றுத்தண்ணீர் விழுந்து என்ன?
    What is the good of giving to those who are not in want, and what is the good of a river flowing where work is being done?

  30. வேண்டி வினை செயேல்.
    Do not act from selfish motives.

  31. வேண்டி வேண்டிக் கொடுத்தாலும் வேண்டாம் என்றாற்போல.
    Like refusing to accept a thing when requested again and again.

  32. வேண்டுமென்றால் வீடு வேண்டாம் என்றால் காடு.
    Domestic or ascetic life just as he pleases.

  33. வேண்டும் என்று நூற்றால் வெண்ணெய்க் கொடிபோல.
    If one spins for her own benefit, the thread is as smooth as butter.

  34. வேதத்தில் நாலு விதம் உண்டு.
    Of Vedas there are four kinds.

  35. வேதத்திற்கும் விக்கிரகபத்திக்கும் பகை.
    The Vedas are opposed to idolatry.

  36. வேதத்தை அறியாத கிழவன் வீண்.
    The old man that knows not the Vedas, is worthless.

  37. வேதத்திற்கு உலகம் பகை உலகத்திற்கு ஞானம் பகை.
    The world is at enmity with the Vedas, and wisdom with the world.

  38. வேதம் ஆய்ந்து ஓதல் போதகர் முறைமை.
    It is the duty of religious teachers to study the Vedas before teaching them.

  39. வேதம் பொய்த்தாலும் வியாழம் பொய்யாது.
    Though the Vedas may fail, Jupiter will never fail.

  40. வேதம் கேட்டவரை வேதம் கேட்டவர் என்பான் ஏன்?
    Why call those Védiar, who have heard the Vedas?

  41. வேதம் ஏன் நாதம் ஏன் விஸ்தாரக் கள்ளருக்கு?
    What need has a widely known hypocrite of the Vedas or the special forms of worship?

  42. வேதம் ஒத்த மித்திரன்.
    A friend whose conduct is consistent with the precepts of the Vedas.

  43. வேதம் ஓதிய வேதியர்க்கு ஓர் மழை.
    One rain (in a month) for the brahmans that expound the Vedas.

  44. வேதாரணியத்தில் பாம்பு கடிக்கிறதும் இல்லை, வேதாரணியச்தில் பாம்பு குறைகிறதும் இல்லை.
    At Védaranyam snakes do not bite, nor do they cease to abound.

  45. வேதியர்க்கு அழகு வேதமும் ஒழுக்கமும்.
    The Vedas and virtue, form the beauty of the brahmans.

  46. வேதியர்க்கு அழகு வேதம் ஓதுதல்.
    It is the office of brahmans to expound the Vedas.

  47. வேந்தனும் பாம்பும் சரி .
    A king and a snake are alike.

  48. வேந்தன் சீறில் ஆந்துணை இல்லை.
    No help if the king is angry.

  49. வேப்பெண்ணெயும் ஆபத்துக்கு உதவும்.
    Even margosa oil will avail on an emergency.

  50. வேப்பெண்ணெய் விற்ற காசு கசக்குமா?
    Will the money obtained by the sale of margosa oil be bitter?

  51. வேப்பெண்ணெய் விருந்து எண்ணெய் அல்ல, மருந்து எண்ணெய்.
    Margosa oil is not used in entertainments; it is medicinal.

  52. வேம்பில் தேனை விட்டால் கசப்பு நீங்குமா?
    Will the bitterness of margosa be removed by infusing honey into it?

  53. வேம்பும் கரும்பாச்சே வெற்றிலையும் நஞ்சாச்சே.
    The margosa has become sugar-cane, and betel has become poison.

  54. வேம்புக்குப் பல் அழகு , வேலுக்குப் பல் இறுகும்.
    When cleaned with a margosa stick the teeth look beaatiful, when cleaned with a vél stick-Acacia arabica-they are made firm.

  55. வேம்பும் சரி வேந்தனும் சரி.
    The margosa and a king are alike.

  56. வேம்பும் சரி பாம்பும் சரி.
    A margosa tree and a snake are alike.

  57. வேம்பை விரும்ப விரும்பக் கரும்பு.
    Constant use makes even margosa sweet.

  58. வேரைக் கல்வி வெந்நீர் வார்த்த கதை.
    The story of digging up a root, and pouring out hot water.

  59. வேர் களைந்த மரம் பிழைப்பது எங்கே?
    How can a tree deprived of its roots live?

  60. வேர் நின்றால் மரம் நிற்கும், வியாபாரம் நின்றால் செட்டி நிற்பான்.
    Trees endure as long as their roots are undecayed, merchants will maintain their social position if their trade continues.

  61. வேர் மூலிகை, மரமூலிகை, காய் மூலிகை.
    Roots, wood, and fruit are all drugs.

  62. வேலமரத்து முள்ளும் ஆலமரத்துக் கனியும் ஆனேன்.
    I am become a thorn of the vél,-Acacia arabica-and a fruit of the banyan.

  63. வேலமரத்திற்கு நிழல் இல்லை, வெள்ளாளனுக்கு உறவு இல்லை.
    The vél tree casts no shade, the Vellala has no friendships.

  64. வேலம் பட்டை மேகத்தை நீக்கும், ஆலம் பட்டை பித்தத்தை அடிக்கும்.
    The bark of the vél cures venereal heat, that of the banyan removes bile.

  65. வேலி ஒன்றுக்குப் பன்னிரண்டு கலம் விரைப்பாடு.
    Twelve kalams of seed corn for one veli of land.
    A veli is nearly equal to five acres.

  66. வேலி ஒன்றுக்குப் ஈரணை மாடும், இரண்டு ஆளும் வேண்டும்.
    For every veli two yokes of oxen and two ploughmen are required.

  67. வேலிக்கு ஓணான் சாட்சி, வெந்ததுக்குச் சொக்கன் சாட்சி.
    The chamelion is the witness of the hedge, the cook boy will testify to the food being well boiled.

  68. வேலிக்குப் போட்ட முள் காலுக்கு வினையாச்சுது.
    The thorns collected for a hedge, have proved injurious to the feet.

  69. வேலி பயிரை மேய்ந்தால் விளைவது எப்படி?
    If the hedge consume the crop, how is the harvest to be obtained?

  70. வேலிலும் நாலு பலன் உண்டு.
    Even a vél tree is useful in four ways.

  71. வேலிவைத்துக் காப்பாற்றாத கன்றும் ஆலைவைத்து ஆட்டாத வாணியனும் சரி அல்ல.
    Plants not protected by a hedge, and an oil-monger who does not work a press, are out of place.

  72. வேலை அற்ற அம்பட்டன் பூனையைப் பிடித்துச் சிரைத்தானாம்.
    It is said that a barber who had nothing to do, got hold of a cat and shaved it.

  73. வேலை அதிகம் சம்பளம் கொஞ்சம்.
    The labour is excessive, the pay little.

  74. வேலை இல்லா ஊருக்கு ராஜா ஏன், பாம்பு இல்லா ஊருக்குக் கீரிப்பிள்ளை ஏன்?
    What need is there of a king in a country where there is no work, or of a mongoose where there are no snakes?

  75. வேலை இல்லாதவனுக்குச் சாப்பாடு என்னத்திற்கு, எச்சிசோற்றுக்காரனுக்கு டம்பம் என்னத்திற்கு?
    Why food to him who does no work, why display to him who lives on offal?

  76. வேலை இல்லாத அம்பட்டன் ஆட்டைச் சிரைத்தானாம்.
    It is said that a barber who had no work, shaved a sheep.

  77. வேலை ஏன், பிள்ளை ஏன், வேலை இல்லாருக்குச் சாப்பாடு ஏன்?
    Why work, why child, why food to those who are destitute of energy?

  78. வேலைக்கள்ளிக்குப் பிள்ளைமேல் சாக்கு, வெட்கம் கெட்ட நாறிக்கு அகமுடையான்மேலே சாக்கு.
    An idle woman pleads her child in excuse for her faults, a shameless woman, her husband.

  79. வேலைக்கள்ளிக்கு வேளைக்குக் காற் படி, வீண் கட்டைக்கு வேளைக்கு அரைப் படி.
    To a shuffling woman a quarter measure for a meal, to a worthless block half a measure.

  80. வேலைக்கள்ளிக்குப் பிள்ளைமேலே சாக்கு.
    A lazy woman neglects her work, and lays the blame on her child.

  81. வேலைக்காரியாய் வந்தவள் வீட்டுக்காரியானால் அவள் அதிஷ்டம்.
    If a maid servant becomes the mistress of a house, it is her fortune.

  82. வேலைக்காரி என்று வேண்டிய பேர்கள் கேட்டார்கள், குடித்தனக்காரி என்று கொடுக்கமாட்டோம் என்றார்கள்.
    Many asked her in marriage thinking that she was skilful in domestic affairs, but they refused on the plea that she was a married girl.

  83. வேலைக்குத் தக்க கூலி, விருப்பத்துக்குத் தக்க கூர்மை.
    Hire suited to the work, sharpness equal to the desires.

  84. வேலைக்கோ சம்பளம், ஆளுக்கோ சம்பளம்?
    Is the hire for the labour, or the labourer?

  85. வேலை செய்தாற் கூலி, வேஷம் போட்டாற் காசு
    If the work be completed, hire; if the character has been sustained, a fee.

  86. வேலை செய்யாத பிள்ளையைக் கையில் வை, வேலை செய்த பிள்ளையைக் காலில் வை.
    Carry in arms the child that does no work, and the child which works, place on your legs.

  87. வேலை மினக்கெட்ட அம்பட்டன் பெண்டாட்டி தலையைச் சிரைத்தானாம்.
    Being without work, the barber is said to have shaved his head.

  88. வேலை மினக்கெட்டு அம்பட்டன் பூனைக்குட்டியைச் சிரைத்தானாம்.
    It is said that a barber wasted his time by shaving a kitten.

  89. வேலை முத்தோ பிள்ளை முத்தோ?
    Is the work a pearl, or the child a pearl?

  90. வேலையைப் பார்த்துக் கூலி கொடு.
    Look at the work before you pay the hire.

  91. வேலையைப் பார்த்துப் பெண்ணை எடு, சாலையைப் பார்த்து ஊருக்கு நட.
    After ascertaining her domestic skill take a girl in marriage, proceed to your village taking care not to miss the road.

  92. வேல் வைத்துப் பயிர் ஆக்குவோர் இல்லை.
    No one cultivates the vél-Acacia arabica-tree.

  93. வேழத்தை ஒத்த வினை வந்தால் தீர்வது எப்படி?
    When a monstrous evil betides one, how can it be removed?

  94. வேழத்திற்குச் சிறிதும் பெரிதாய்த் தோன்றும்
    To an elephant small objects appear great.

  95. வேழம் முழங்கினாற்போல.
    Like the thundering of an elephant.

  96. வேளை அறிந்து பேசு, நாளை அறிந்து பயணம் பண்ணு.
    Speak opportunely, set out on a journey on an auspicious day.

  97. வேளைக்கு அரைக் காசு ஆயிரம் பொன் ஆகும்.
    Half a cash at a time will, in the long run, amount to thousands of gold.

  98. வேளைக்கு உதவாத பிள்ளை தாழங்காய்க்குச் சரி.
    A child who does not help in an emergency is like the fruit of the screw-pine.

  99. வேளையோ அவவேளை வீட்டிலோ அன்னம் இல்லை.
    The time is unfavourable, at home there is no rice.

  100. வேறே வினை தேவை இல்லை, விளையாத்தாள் கோவிலுக்குப் போகவேண்டியதில்லை.
    There is no need of another evil, it is not necessary to go to the temple of the goddess of misfortune.

  101. வேனலுக்குக் கன மழை வரும், வேந்தனுக்குக் கன சனம் சேரும்.
    Excess of heat foretokens a heavy fall of rain, the presence of a king attracts a multitude of people.

  102. வேனிற் காலத்திற்கு விசிறி ஆன காலத்திற்கு ஆச்சாவும் தேக்கும்.
    In the hot season a fan is useful, in prosperous times acha-ebony-and teak wood.